சிங்கப்பூர்1819, ஜனவரி, 29 – அன்று, சர் தாமஸ் ஸ்டாம்பர்ட் ராபிள்ஸ் என்பவர் தீபகற்ப மலேசியாவின் பெருநிலப் பகுதியில் தரை இறங்கினார். இந்தப் பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனம் சார்பில் வணிக நிலையம் ஒன்றை அமைக்க விரும்பினார். இதுவே பின்னாளில் சிங்கப்பூர் நாடானது.

1819, பிப்ரவரி, 6 – அன்று, தேதி ஜொகூர் சுல்தானகத்தின் மன்னராக இருந்த சுல்தான் உசேன் ஷா (Hussein Shah of Johor) என்பவருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அந்த ஒப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் வணிக நிலையம் ஒன்றையும்; குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக் கொண்டது.

1824, ஆகஸ்ட்- வரை வரை சிங்கப்பூர் மலாய் ஆட்சியாளரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாகவே இருந்தது.

1824-இல் சிங்கப்பூர், பிரிட்டனின் நேரடி ஆட்சியினுள் வந்தது.

1824, ஆகஸ்ட், 2 – அன்று, ஜான் குரோபுர்ட் (John Crawfurd), சுல்தான் உசேன் ஷாவுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் உசேன் ஷா, சிங்கப்பூர் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்கு வழங்கினார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். சிங்கப்பூரில் இருந்த இரண்டாம் நிலை அதிகாரியான ஜான் குரோபுர்ட் (John Crawfurd) என்பவரே சிங்கப்பூரைப் பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர்.

1826-இல் சிங்கப்பூர், தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது.

1856-ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சி செய்தது.

1867-ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது.

1942, செப்டம்பர், 01 – அன்று, இந்திய தேசிய இராணுவத்தை, விடுதலை புரட்சி நாயகர் ராஷ்பிகாரி கோஷ் அவர்கள் சிங்கப்பூரில் தொடங்கினார்.

1945 – ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது.

1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர், பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோப் பின் இசாக் (Yusof bin Ishak) என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ (Lee Kuan Yew) பிரதமராகவும் ஆயினர்.

1963-இல் செப்டம்பர் மாதம் சிங்கப்பூர், மலாயா, சபா, சரவாக் ஆகிய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளுடன் சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1965, ஆகஸ்ட், 9 – அன்று, மலேசியக் கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர், விலகி இறைமையுள்ள ஒரு நாடானது. யூசோப் பின் இசாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார்.


சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர் குடியரசு என்பது தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு.

இது மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது.

சிங்கப்பூர் தீவை ஜொகூர் நீரிணை, மலேசியாவில் இருந்து பிரிக்கிறது.

தெற்கில் சிங்கப்பூர் நீரிணை இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது.

சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும்.

மிகக் pகுறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன.

நிலச் சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது.

சிங்கப்பூர், சிங்கம் + ஊர் = சிங்கப்பூர்; அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டது.

சிங்கப்பூர் என்ற பெயர் சிங்கப்பூரா என்ற மலாய்ச் சொல்லில் இருந்து மருவியதாகவும் கூறப்படுகிறது.

மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்); மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூரின் காலனித்துவ ஆட்சிக்கு முந்தைய வரலாறு 14-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது.

அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டு இருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது.

14-ஆம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சி அளித்தது. அ

து சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது.

சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்றும் மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது.

சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி என்பது ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர்.

சிங்கப்பூர் ஆற்றுப் பகுதி, பல்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலைகள் செய்து வந்தனர். மலாய் மக்கள்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர்.