1810, செப்டம்பர், 18 – அன்று சிலி நாடானது, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது.

சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும்.

இதன் கிழக்கே அர்ஜெண்டினா அமைந்துள்ளது.

இந்நாடு தெற்கு-வடக்காக 4,630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு.

வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென் கோடியிலே நிலவுலகின் தென்முனைப் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவைத் தொட்டுக்கொண்டும் உள்ள நாடு.

உலகில் மிக நீளமான நாடு சிலி ஆகும்.

இந்நாட்டின் தலைநகரம் சான்ட்டியாகோ ஆகும். இந்நாட்டின் ஆண்சி மொழி ஸ்பானிஷ் ஆகும்.

பெரும்பான்மையான மக்களால் கிருஸ்தவம் பின்பற்றப்படுகிறது.

சிலி நாட்டின் மொத்த பரப்பளவு 7,56,096.3 சதுர கிலோ மீட்டர் ஆகும். நாணயம் பெசோ (Peso) ஆகும்.

இந்நாடானது இரண்டு நேர மண்டலங்களைக் கொண்டுள்ளது. அவையாவன, முறையே UTC-4 and 6, கோடை காலத்தில் UTC -3 and -5 (ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை).

இந்நாட்டின் தொலைபேசி அழைப்புக் குறியீடு +56. இணைய குறியீடு .cl.

சிலி நாடு, உலகில் தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

1970, அக்டோபர், 24 – அன்று, சிலி நாட்டின் முதல் மார்க்சிய சிந்தனை கொண்ட சால்வடார் அலெண்டி (Salvador Allende), ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2010 பிப்ரவரி மாதம் சிலி நாட்டில் ஏற்பட்ட ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 8.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 708 மக்கள் உயிரிழந்தார்கள்.

2021, டிசம்பர், 21 – சிலி நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயது இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் வெற்றி பெற்றார். மாணவ செயல்பாட்டாளராக இருந்த கேப்ரியல் போரிக், நாட்டிலேயே இளம் வயதில் அதிபரானவர் என்ற பெருமையை பெற்றார்.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா