அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த – ஆகிய இந்த சொற்கள் ஒன்றை சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு சுட்டிக் காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துக்களே காரணம் ஆகும்.
இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்கு சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகளாகும்.
ஆனால் இங்கு ‘உ’ என்னூம் எழுத்து சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை.