சுவாசித்தல் இரண்டு வகைப்படும்.
அவையாவன, காற்றுச் சுவாசம், காற்றில்லா சுவாசம்
இலையானது, ஒளிச்சேர்க்கை, சுவாசித்தல், மற்றும் நீராவிப் போக்கு ஆகிய மூன்று செயல்களையும் செய்யும் தாவர உறுப்பு ஆகும்.
சுவாசித்தலில் குளுக்கோஸ் என்பது 6 கார்பன் கொண்ட சேர்மம் ஆகும்.
காற்றில்லா சுவாசத்திற்கு மற்றொரு பெயர் நொதித்தல் ஆகும்.
ஈஸ்டின் காற்றில்லா சுவாசத்தினால் உண்டாவது எத்தனால் ஆகும்.
ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி ஸ்டார்ச்சை முழுமையாக சிதைத்து ஆற்றலைப் பெறும் முறை காற்றுள்ள சுவாசம் ஆகும்.
காற்றில்லா சூழ்நிலையில் ஒரு சில எளிய தாவரங்களும் பாக்டீரியாக்களும் உணவுப் பொருளை முழுமையாக சிதைக்காமல் ஒரு பகுதியை மட்டும் சிதைத்து ஆற்றலைப் பெறும் முறை காற்றில்லா சுவாசம் ஆகும்.
எடுத்துக்காட்டு – பூஞ்சை, பாக்டீரியா
காற்றில்லா சுவாசத்திற்கு எடுத்துக்காட்டு, பால் தயிராகும் நிகழ்வு ஆகும்.
பகல் நேரத்தில் இலைகளை மேலம் கீழும் இயக்கும் தாவரம் – தந்தித் தாவரம்
கரையாத உணவும் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் எளிய நிகழ்ச்சி செரித்தல் ஆகும்.
ஒளிச்சேர்க்கைக்குத் தேவையானது – பசுங்கணிகம்
ஒளிச்சேர்க்கைக்கு சூரிய ஒளி தேவே என்பதனை நிரூபிக்கும் சோதனை – கேனாங்கின் ஒளித்திரை சோதனை
உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் – டயலின்
ஒளிச்சேர்க்கைக்கு கார்பன்-டை-ஆக்ஸைடு தேவை என்பதை நிரூபிக்கும் சோதனை – மோலின் அரை இலை சோதனை.