1867, பிப்ரவரி, 17 – அன்று, சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்ற தினம்

சூயஸ் கால்வாய், எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும்.

இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது.

163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 ஆம் ஆண்டு, நவம்பர், 17 அன்று திறக்கப்பட்டது.

இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான கப்பற்போக்குவரத்து மிக இலகுவானது.

அதன்முன்னர் கப்பல்கள் ஆப்பிரிக்காவைச் சுற்றியே பயணிக்க வேண்டியிருந்தது.

ஃபிரெஞ்சு நிறுவனம் ஒன்றால் 1859 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கால்வாய் வெட்டும் பணி பத்தாண்டு காலமாகத் தொடர்ந்து நடந்து, 1869 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது.

இந்தக் கால்வாயை வெட்டியவர் பிரெஞ்சுப் பொறியியல் நிபுணர் ஃபெர்டினார்ட் டி லெஸ்ஸிப்ஸ் இக்கால்வாயின் வெற்றி பிரான்சு நாட்டினரை பனாமா கால்வாயை அமைக்கத் தூண்டியது.

ஓராண்டில் ஏறக்குறைய 15,000 கப்பல்கள் இக்கால்வாயைக் கடக்கின்றன.

ஒவ்வொரு கப்பலும் இக்கால்வாயைக் கடக்க 16 மணி நேரம் வரை ஆகிறது.

சைய்டின் துறைமுகத்தின் வடக்கு முனையிலிருந்து சூயஸ் நகரத்தில் உள்ள போர்ட் ட்வெஃபிக்கின் தெற்கு முனைவரை இது நீட்டிக்கப்படுகிறது.

இதன் வடக்கு மற்றும் தெற்கு அணுகல் கால்வாய்கள் உட்பட. இதன் நீளம் 193.30 கிமீ (120.11 மைல்), 2012 ஆம் ஆண்டில், 17,225 கப்பல்கள் கால்வாயை (நாள் ஒன்றுக்கு 47) கடந்து சென்றன.

அசல் கால்வாயானது பலாஹ் புறவழி மற்றும் கிரேட் பிட்டர் ஏரி ஆகிய இடங்களைக் கடக்கும் ஒற்றைப் பாதை நீர்வழியாகும்.

இக்கால்வாயில் நீரை அடைக்கும் அமைப்பு இல்லை, கடல் நீர் இந்த கால்வாய் வழியே ஓடும்.

பொதுவாக, குளிர்காலத்தில் பிட்டர் ஏரிகளின் வடக்கிலிருந்து கால்வாயில் நீர்பாயும் ஆனால் கோடைக் காலத்தில் தெற்கிலிலுந்து வடக்கே பாய்கிறது.

இந்தக் கால்வாய் எகிப்து சூயஸ் கால்வாய் ஆணையத்தால் (SCA) பராமரிக்கப்பட்டு வருகிறது.

கான்ஸ்டன்டினோபாலின் மாநாட்டின் முடிவின்படி, இக்கால்வாயை “சமாதான காலத்திலும் போர் காலத்திலும், ஒவ்வொரு கப்பலும் வர்தகத்துக்கோ அல்லது போர் பயன்பாட்டுக்கோ கொடி பாகுபாடு இல்லாமல்” பயன்படுத்தப்படலாம்.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், கால்வாய் பயணத்தின் நேரத்தை குறைக்க 35 கிமீ (22 மைல்) க்கு பலாஹ் புறவழி விரிவுபடுத்தும் பணி தொடங்கப்பட்டது.

சூயஸ் கால்வாயின் திறனை ஒரு நாளைக்கு 49 என்பதிலிருந்து 97 கப்பல்கள் என இருமடங்காக விரிவாக்க திட்டமிடப்பட்டது.

$ 8.4 பில்லியன் செலவில், இந்த திட்டம் எகிப்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு பிரத்தியேகமாக வழங்கப்பட்ட வட்டி ஈட்டும் முதலீட்டு சான்றிதழ்களுடன் நிதியளிக்கப்பட்டது.

இவ்வாறு “புதிய சூயஸ் கால்வாய்”, விரிவாக்கப் பட்டது, இது 2015 ஆகத்து ஆகஸ்ட் 6, அன்று ஒரு விழாவில் பெரும் ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது.