கி.பி. 1217 – செர்பிய இராச்சியம் உருவாக்கப்பட்டது.
கி.பி. 1345 – செர்பிய பேரரசு உருவாக்கப்பட்டது.
1804, பிப்ரவரி, 15 – முதலாம் செர்பிய புரட்சி
1867, மார்ச், 25 – செர்பிய ஆட்சிப் பிரதேசம் வரையறுக்கப்பட்டது.
1878, ஜூலை, 13 – பெர்லின் காங்கிரஸ் தேற்றுவிக்கப்பட்டது.
1918, நவம்பர், 25 – செர்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
2022, ஜூலை, 11, 12 – லண்டன் விம்பில்டன் டென்னிஸ் ஒற்றையர் மகளிர் பிரிவில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நேவாக் ஜேகோவிச் பட்டம் வென்றார். இது அவருடைய 21 ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
செர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும்.
இது ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடாகும்.
இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும்.
இதன் வடக்கில் ஹங்கேரியும், கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியா மற்றும் மெசெடோனியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
தலைநகரம் – பெல்கிரேட்
ஆட்சி மொழி – செர்பியன்
அரசாங்கம் – நாடாளுமன்ற மக்களாட்சி
பரப்பளவு – 88,361 சதுர கிலோ மீட்டர்கள்
நாணயம் – செர்பிய தினார் (RSD)
தொலைபேசி அழைப்புக்குறி +381
இணையக்குறி – .rs (.yu)