சேலம் (Salem) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.
தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது.
கொங்கு நாட்டில் அமைந்துள்ள இவ்வூர், மாம்பழத்திற்கு பெயர் பெற்றது. மாம்பழ நகரம் என்று அழைக்கப்படுகிறது.
சேலம் மாநகராட்சி பரந்து விரிந்த ஓர் பெருநகரம் ஆகும்.
தமிழகத்தின் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சிக்கு அடுத்த ஐந்தாவது பெருநகரம் ஆகும்.
தென்னிந்தியாவை பொறுத்தவரையும், தமிழகத்தை பொறுத்தவரை இங்கு தான் தமிழக மக்கள் நுகர்வோர் பொருட்கள் விலை நிர்ணயிக்கப்படும்.
சேலம் மாநகர விலைதான் தமிழகத்தில் 32 மாவட்டங்களும் நிர்ணயிக்கப்படும்.
சேலம் மாநகராட்சியானது தென்னிந்திய இரயில்வே கோட்ட தலைமை இடமாகும்.
இந்த கோட்டத்தில் தமிழகத்தில் 10 மாவட்டங்கள் அடங்கும்.
இதனாலையே இது சேலம் பெருநகர மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும்.
சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை “மாங்கனி நகரம்” என்றும் அழைப்பார்கள்.
தமிழ்நாட்டில் இரும்பு எஃகு ஆலை சேலத்தில் அமைந்துள்ளது.
1965, அக்டோபர், 02 – அன்று காமராசர் அவர்களால் தனி மாவட்டமாக சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து தருமபுரி உருவாக்கப்பட்டது.
1994 – ஆம் ஆண்டு, சேலம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
1997, ஜனவரி, 01 – அன்று முதல், நாமக்கல் மாவட்டமானது சேலம் மாவட்டத்திலிருந்து பிரிந்து தனி மாவட்டமாக உதயமானது.
1997 – ஆம் ஆண்டு, சேலத்தில், பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
சிறப்பு
- சேலம் சி. விஜயராகாவாச்சாரியார் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.
- 1937– ல் சேலம் மாவட்டத்தில் தான் முதன் முதலில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது.
- இங்கு விளையும் மல்கோவா மாம்பழம் மிகவும் பிரசித்தி பெற்றது.
- கைத்தறி, வணிக நிலையங்கள் நிறைந்தது இவ்வூர்.
- இந்தியாவிலேயே மிகவும் நீளமான – பெரிய இரயில்வே நடைமேடை சேலம் சந்திப்பு நிலையத்தில் உள்ள நடைமேடை ஆகும்.
- சேலம் மாவட்ட அரசு அருங்காட்சியகம் ஓமலூர் சாலையில் அமைந்துள்ளது.
- சேலத்தைச் சுற்றி பார்க்கத்தக்க இடங்கள்: 24 கி.மீ. தொலைவிலுள்ள தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் கோவில், 5 கி.மீ. தொலைவிலுள்ள ஸ்ரீகுமரகிரி கோயில், 10 கி.மீ. தொலைவிலுள்ள கந்தராஸ்ரமம், திப்புசுல்தான் கட்டிய ஜாமா மஜ்ஜிட், சேலம் ஸ்டீல் பிளாண்டை அனுமதியுடன் பார்க்கலாம். 10 கி.மீ. தொலைவிலுள்ள குரும்பபட்டி உயிரியல் பூங்கா – இது சேர்வராயன் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.
- சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
சட்ட சபை தொகுதிகள்
- கெங்கவள்ளி (தனி)
- ஆத்தூர் (தனி)
- ஏற்காடு (தனி – பழங்குடியினர்)
- ஓமலூர்
- மேட்டூர்
- எடப்பாடி
- சங்ககிரி
- சேலம் (மேற்கு)
- சேலம் (வடக்கு)
- சேலம் (தெற்கு)
- வீரபாண்டி
பாராளுமன்ற தொகுதிகள்
- ராசிபுரம் (நாமக்கல்)
- சேலம்
- திருச்செங்கோடு
- தர்மபுரி (சேலம் மட்டும் முழுத்தொகுதி, மற்றவை வேறு மாவட்ட பகுதி)
சுற்றுலா தளங்கள்
- ஏற்காடு (மலைவாழிடம் – கடல் மட்டத்திலிருந்து 5100 அடி உயரம்),
- மேட்டூர் அணை, தாரமங்கலம் கோவில், சேலம் உருக்காலை,
- மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவில்
- சேலம் கந்தாஸ்ரமம், குருவம்பட்டி உயிரியல் பூங்கா.