தலைநகரம் – மொகடீஸ்

ஆட்சி மொழி – சொமாலி மொழி

மக்கள் – சோமாலி

அரசாங்கம் – சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு

பரப்பு – 6,37,661 சதுர கி.மீ

நாணயம் – சோமாலிக் ஷில்லிங் (SOS)

தொலைபேசி அழைப்புக்குறி +252

இணையக்குறி .so

1960, ஜனவரி, 01 – அன்று சோமாலியா இத்தாலியிடம் இருந்து விடுதலை பெற்றது.

சோமாலியா (Somalia, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.

இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே ஏமன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன.

சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது.

அதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது.

அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.

1977, ஜூலை, 13 – அன்று சோமாலியாவானது எத்தியோப்பியா மீது போர்ப் பிரகடனம் செய்தது, இதன் விளைவாக இரு நாடிகளுக்குமிடையே Ogaden War துவங்கியது.

2021, டிசம்பர், 27 – சோமாலியா நாட்டில் ஊழல் புகாரில் சிக்கிய பிரதமர் முகமது ஹூசைனை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தார் அதிபர் முகமது ஃபர்மாஜோ. இருவருக்கும் இடையே அதிகார பணிப்போர் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் திடீர் நடவடிக்கை எடுத்துள்ளார்.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா