வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியீற்று ணகரமும், னகரமும் முறையே வல்லின முதன் மொழியோடு புணரும்போது டகரமாகவும் றகரமாகவும் திரியும்.

  • ணகரம் டகரமாதல்,

மண்+கலம் = மட்கலம்

  • னகரம் றகரமாதல்,

பொன்+குடம் = பொற்குடம்

விதி :

“ணனவல் லினம் வரட் டறவும் பிறவரின்

இயல்பும் ஆகும் வேற்றுமைக் கல்வழிக்

கனைத்துமெய்  வரினும் இயல்பா கும்மே “   நன்னூல் – 209

எழுத்துஎழுத்து


சொல்


புணர்ச்சி
பொது


அணி


இலக்கியம்
தமிழ் புலவர்கள்