தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ளப் பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும்.
தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது.
இதன் அணு எண் 79.
இதன் சாரடர்த்தி 19.3 ஆகும்.
அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது.
இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது.
எளிதில் மற்ற தனிமங்களுடன் வினை புரியாது.
தங்கத்தின் தூய்மையை கேரட் என்ற அலகால் அளக்கப்படுகிறது.
24 காரட் தங்கம் மிக தூய்மையான தங்கம் ஆகும்.
தூய தங்கத்தில் ஆபணங்கள் செய்ய முடியாது, எனவே தங்கத்துடன் சிறிதளவு செம்பு சேர்க்கப்படுகிறது.
22 காரட் தங்கம் ஆபரணங்கள் செய்ய பயன்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கம்பியாக நீட்ட முடியம்.