தனிமம்
தனிமம் என்ற வார்த்தையை முதன்முதலில் பயண்படுத்தியவர் ராபர்ட் பாயில் ஆவார்.
இதுவரையில் 118 தனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றில் 94 தனிமங்கள் இயற்கையானது மற்றும் 24 தனிமங்கள் ஆய்வகங்களில் செயற்கையாக தயாரிக்கப்பட்டது.
பல தனிமங்கள் இணைந்து சேர்மங்கள் உருவாகின்றது.
பெரும்பாலும் தனிமங்கள் இயற்கையில் தனித்த நிலையில் கிடைப்பது மிகவும் அரிதான நிகழ்வாகும்.
இதுவரை 112 தனிமங்களுக்கு IUPAC அதிகாரபூர்வமான குறியீடு வெளியிட்டுள்ளது.
அணு நிறையினை குறிப்பிட ‘எண்கள்’ என்ற வார்த்தையை A.B.E.டி சான்கோர்டாஸ் பயன்படுத்தினார்.
தனிமங்களை வகைப்படுத்தும் பொருட்டு எண்ம விதியினை J.நியூலண்ட் முன்மொழிந்தார்.
தற்போதுள்ள நவீண ஆவர்த்தன அட்டவணையை ஒத்த ஒரு தனிம வரிசை அட்டவணையை லோதர் மேயர் உருவாக்கினார்.
ஆவர்த்தண விதியின் அடிப்படையில் மெண்டலீஃப் முதன் முதலாக ஆவர்த்தண அட்டவணையை கட்டமைத்தார்.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் உலோகத் தன்மையினையும், அதிக உருகு நிலையையும் கொண்டுள்ள தனிமங்களாகும்.
மந்த வாயுக்களின் எலக்ட்ரான் கவர்த்தன்மை மதிப்பு பூஜ்ஜியம் என எடுத்துக்கொள்ளப்படுகிறத்.
நவீன தனிம வரிசை அட்டவணையில் இடம்பெற்றுள்ள தனிமங்களுள் 78% – க்கும் அதிகமான தனிமங்கள் உலோகங்கள் ஆகும்.
தனிம வரிசை அட்டவணையில் இடப்புறத்தில் உலோகங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
அலோகங்கள் அனைத்தும் தனிம வரிசை அட்டவணையில் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ளன.
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் தனித்துவமான பண்புகளுள் சிலவற்றை ஒருங்கே கொண்டுள்ள தனிமங்கள் உலோகப்போலிகள் என்று அழைக்கப்படுகின்றன.