இந்தியப் பரப்பளவில் 4 %, மக்கள் தொகையில் 6 % கொண்டுள்ள தமிழ்நாடு, இந்திய நீர்வளத்தில் 2.5 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளது.
தமிழ்நாட்டின் மேற்பரப்பு நீரில் 95 % – க்கு அதிகமாகவும் மற்றும் நிலத்தடி நீரில் 80 % – க்கு அதிகமாகவம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.
அதிகளவு நீரானது மக்கள் மற்றும் விலங்குகளின் நுகர்வு, நீர்பாசனம் மற்றும் தொழிலகப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
தமிழகம் பருவமழையைச் சார்ந்தே உள்ளது.
தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு ஏறத்தாழ 930 மில்லி மீட்டராகும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் 47% – ம், தென்மேற்கு பருவமழை காலத்தில் 35% – ம், கோடை காலத்தில் 14% – ம், குளிர் காலத்தில் 4% – ம் மழைப்பொழிவு பெறுகிறது.
தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் அதன் விளக்கமும்
பெயர் | விளக்கம் |
---|---|
அகழி | கோட்டையின் புறத்தே அமைக்கப்பட்ட நீர் அரண் |
அருவி | மலை முகட்டு தேக்க நீர் குத்திட்டுக் குதிப்பது |
ஆழிக்கிணறு | கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு |
ஆறு | இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்பரப்பு |
இலஞ்சி | பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் |
உறைகிணறு | மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு |
ஊருணி | மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை |