உ. வே. சாமிநாதையர்  பிப்ரவரி 19, 1855ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில்  உள்ள “உத்தமதானபுரம்” எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார்.

உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் மகன் சாமிநாதன் சுருக்கமாக உ.வே.சா என அறியப்படுகிறார். தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுகிறார்.

இவரது தந்தை ஒர் இசைக் கலைஞர். உ.வே.சா தனது தொடக்கத் தமிழ்க்கல்வியையும், இசைக் கல்வியையும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடத்தே கற்றார்.

பின்னர் தன் 17 ஆம் வயதில் தஞ்சாவூர் திருவாவடுதுறை சைவ ஆதீனத்தில் தமிழ் கற்பித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மகாவித்துவான் என அழைக்கப்பட்ட தமிழறிஞர் திருச்சிராப்பள்ளி மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களிடம் 5 ஆண்டு காலம் பயின்று தமிழறிஞர் ஆனார்.

தொடக்கத்தில் கும்பகோணத்திலிருந்த கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியில் இருந்த சாமிநாதன், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் ஆசிரியராக இருந்தார்.

இவர் தனது 87 ஆவது வயதில், ஏப்ரல் 28, 1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் உ. வே. சாமிநாதன் குறிப்பிடத்தக்கவர்.

தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச் செய்தவர்.

உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.

பழங்காலத்தில் பனைஓலையில் எழுத்தாணியை வைத்து எழுதினார்கள்.

பழங்கால செய்யுள் இலக்கணம் போன்றவை அனைத்தும் ஓலைச்சுவடியில் எழுதி பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஓலைச்சுவடி எழுத்துக்களில் புள்ளி, ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு வேறுபாடு இருக்காது.

எழுத்தாணியைக் கொண்டு எழுதும் ஓலைக்குப் பெயர் ஓலைச்சுவடி.

இவ்வாறு ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கண இலக்கியங்களை நமக்காக தாளில் எழுதி, அச்சிட்டுக் கொடுத்தவர் உ.வே.சாமிநாதர் ஆவார்.

ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படும் இடங்களாவன,

 • கீழத்திசை சுவடிகள் நூலகம், சென்னை
 • அரசு ஆவணக் காப்பகம், சென்னை
 • சரசுவதி மகால், தஞ்சாவூர்
 • உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை

தமிழ்த்தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றின் நூலின் பெயர் “என் சரிதம்” ஆகும்.

உ.வே.சா அவர்கள் பதிப்பித்த நூல்களுல் சிலவாவன

 1. பத்துப்பாட்டு – 10
 2. எட்டுத்தொகை – 8
 3. சீவகசிந்தாமணி
 4. சிலப்பதிகாரம்
 5. மணிமேகலை
 6. புராணங்கள் – 12
 7. உலா – 9
 8. கோவை – 6
 9. தூது – 6
 10. வெண்பா நூல்கள் – 13
 11. அந்தாதி – 3
 12. பரணி – 2
 13. மும்மணிக்கோவை – 2
 14. இரட்டைமணிமாலை – 2
 15. இதர பிரபந்தங்கள் – 4.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள், எனப் பலவகைப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளுக்கு நூல்வடிவம் தந்து அவற்றை அழிவில் இருந்து காத்தது மட்டுமின்றி அடுத்த தலைமுறையினர் அறியத் தந்தார்.

சங்ககாலத் தமிழும் பிற்காலத் தமிழும், புதியதும் பழையதும், நல்லுரைக் கோவை போன்ற பல உரைநடை நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

உ.வே.சா. கருத்தாழத்தோடு நகைச்சுவை இழையோடப் பேசும் திறமை உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது.

1904 ஆம் ஆண்டு டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் முதன் முதலாக பதிற்றுப்பத்து நூலினை பதிப்பித்து வெளியிட்டார்.

1932, மார்ச் 21, அன்று, சென்னைப் பல்கலைக்கழகம் – உ.வே.சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி, மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது.

1942, ஏப்ரல், 28 – அன்று, உ.வே.சாமிநாதையர் அவர்கள் இயற்கை எய்தினார்.

1942-ல் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

1947 – ஆம் ஆண்டு, டாக்டர் உ.வே.சா நூலகம் சென்னையில் துவங்கப்பட்டது.

இதுதவிர மகாமகோபாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.

பிப்ரவரி 18, 2006 ம் ஆண்டில், இந்திய அரசு, இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.

உ.வே.சா நூல்நிலையம் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் 1942 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இவரது தமிழ்ப்பணிகளை ஜி.யு.போப், சூலியஸ் வின்சோன் போன்ற வெளிநாட்டு அறிஞர்கள் பாராட்டினர்.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)