1965, அக்டோபர், 02 – அன்று காமராசர் அவர்களால் தனி மாவட்டமாக சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து தருமபுரி உருவாக்கப்பட்டது.

2004, பிப்ரவரி, 09 – தரும்புரி மாவட்டத்தின் பரந்த பகுதி காரணமாக மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

2011, செப்டம்பர், 29 – தருமபுரி மாவட்டத்தில் வாசாத்தி மலைக் கிராமத்தில் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற வன்கொடுமை சம்பவத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் உயிரோடு இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தருமபுரி அல்லது தர்மபுரி (Dharmapuri) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஒரு நகராட்சி ஆகும்.

இதுவே தருமபுரி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்

இது பழங்காலத்தில் தகடூர் என அழைக்கப்பட்டது.

இப்பகுதி பிற்காலத்தில் விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.

அவ்வைக்கு நெல்லிக்கனியை ஈந்த அதியமான் ஆண்ட பகுதி ஆகும்.

இந்நகரை தலைநகராக கொண்டு சங்க கால மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி ஆட்சி புரிந்தார்.

இது சென்னை மற்றும் பெங்களூருக்கு நடுவில் அமைந்துள்ளது.

சேலத்திலிருந்து, பெங்களூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 7 இந்நகரின் வழியாக செல்கிறது.

தருமபுரிக்கு மேற்கே 48 கி.மீ தொலைவில் ஒகேனக்கல் அருவி உள்ளது. இவ்விடத்தில்தான் காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழைகிறது.

தென்னிந்தியாவின் நயாகரா என்று ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அழைக்ப்படுகிறது.

இங்கு கோட்டை கோவில் சென்றாய பெருமாள் கோயில் மற்றும் இங்கிருக்கும் தீர்த்தமலையில் அமைந்திருக்கும் தீர்த்தகிரீஸ்ரர் கோயில்கள் உள்ளது.

இம்மாவட்டத்தின் வழியே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது.

தோட்டக்கலை பூமி என அழைக்கப்படும் மாவட்டமாகும்.