தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் சிவபெருமானையும் குருபகவானின் அதிதேவதை பிரம்மாவையும் வணங்கினால் நம் தலையெழுத்தே மாறும் ! துன்பங்களுக்கு கவலைகளுக்கு விமோச்சனம் நிச்சயம் கிடைக்கும்.!

பிரம்மபுரீஸ்வரர் திருவருள் புரிவார் என்று !
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்! பிரம்மா தான் குருபகவானின் அதிதேவதை! எனவே ஒவ்வொரு வியாழன் தோறும் குருவை வழிபடுவதோடு பிரம்மாவையும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஸ்வாமியையும் வழிபட வேண்டும்!

மூலவர் : பிரம்மபுரீஸ்வரர்
அம்மன்/தாயார் : பிரம்மநாயகி (பிரம்ம சம்பத்கவுரி)
தல விருட்சம் : மகிழமரம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
ஆகமம்/பூஜை : காரண ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருப்பிடவூர், திருப்படையூர்
ஊர் : சிறுகனூர், திருப்பட்டூர்
மாவட்டம் : திருச்சி

திருச்சி மாவட்டம் சிறுகனூரை அடுத்த திருப்பட்டூரில் அமைந்துள்ளது பிரம்மபுரீஸ்வரர் கோவில்.
இங்கு பிரம்மன் வழிபட்ட ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை உடையது) தனி மண்டபத்தில் உள்ளது. பிரம்மன் சாப விமோசனம் பெற சிவன் அருள் செய்த தலம் இது.