தாதாபாய் நௌரோஜி (Dadabhai Naoroji, செப்டம்பர் 4, 1825 – ஜூன் 30, 1917) இந்தியாவின், அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.

இவர் மும்பையிலுள்ள நவ்சாரியில் பிறந்தார்.

இவர் மும்பைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.

1886, 1893, 1906 ஆகிய கால கட்டங்களில் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகச் செயல்பட்டார்.

1886, டிசம்பர் 27 ல் – இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார்.

1870 – ஆம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜி, பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1892 முதல் 1895 வரை ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

1865 – ஆம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜி அவர்கள் லண்டனில், ‘இந்திய சங்கம்’ (Indian Society) – யை தோற்றுவித்தார்.

1866 – ஆம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜி அவர்கள் லண்டனில், ‘கிழக்கிந்திய கழகம்’ (East Indian Association) – யை தோற்றுவித்தார்.

‘இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவர்’ என அறியப்படும் தாதாபாய் நௌரோஜி தொடக்ககால தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராவார்.

தாதாபாய் நௌரோஜி அவர்களின் வாழ்க்கைத் துணைவி குல்பாய் ஆவார்.

இவரது பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India – 1901) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.

இந்நூலில் அவர், ‘செல்வச் சுரண்டல்’ எனும் கோட்பாட்டை முன்வைத்தார்.

இவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மும்பை, கராச்சி(பாகிஸ்தான்), ஃபின்ஸ்புரி(லண்டன்) ஆகிய இடங்களில் முக்கிய சாலைகளுக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள ஒரு மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புப் பகுதிக்கு, நௌரொஜி நகர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)
கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரைகி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)