கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைப்பெயர்கள் முன் வேறு திசைப்பெயர்களோ, பிற சொற்களோ வந்து புணரும்போது நிலைமொழியின் இறுதியிலுள்ள உயிர்மெய்யெழுத்து ‘கு’வும் அதன் அயலெழுத்தாகிய ககர ஒற்றும் ‘க்’ நீங்கிப் புணரும்.

எ.கா: வடக்கு+மேற்கு = வடமேற்கு

ஈற்று உயிர்மெய்யும், ககரமும் நீங்கிப் புணர்ந்தது.

ஈற்று உயிர்மெய் நீங்கியபின் அடுத்து நிற்கும் றகரம் னகரமாகவோ, லகரமாகவோ திரிந்து புணரும்,

எ.கா: தெற்கு+கிழக்கு = தென்கிழக்கு

ஈற்று உயிர்மெய் நீங்கி றகரம் னகரமாகத் திரிந்தது.

எ.கா: மேற்கு+நாடு = மேல்நாடு

ஈற்று உயிர்மெய் நீங்கி றகரம் லகரமாகத் திரிந்தது.

விதி:

“திசையொடு திசையும் பிறவும் சேரின்

நிலையீற் றுயிர்மெய் கவ்வொற்று நீங்கலும்

றகரம் னலவாத் திரிதலும் ஆம்பிற”.                   நன்னூல்-186

எழுத்துஎழுத்து


சொல்


புணர்ச்சி
பொது


அணி


இலக்கியம்
தமிழ் புலவர்கள்