1985, செப்டம்பர், 15 – அன்று மதுரை மாவட்டத்திலிருந்து பிரிந்து திண்டுக்கல் அண்ணா மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1997 முதல் மாவட்ட தலைநகரின் பெயரிலேயே திண்டுக்கல் மாவட்டம் என்று அழைக்கப்படுகிறது.

இங்க்குள்ள மலையில் சமணப் பள்ளிகள் இருந்தன அங்கு அவர்கள் அமைத்த கற்படுக்கைகளால் திண்டுக்கல் என பெயர் பெற்றது.

மலைவாழிடங்களின் இளவரசி என்று கொடைக்கானல் அழைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பித்து அழைக்கப்படும் மாவட்டமாகும்.

திப்பு சுல்தான் ஆட்சியின் கீழ் இருந்த வரலாற்று நகரம் திண்டுக்கல் ஆகும்.

பழனி மலை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். இது, தமிழகத்திலேயே அதிக வருவாய் ஈட்டும் கோயிலாகும்.

தியாகி சுப்பிரமணிய சிவா இம்மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டில் தான் பிறந்தார்.

பூட்டு மற்றும் தோல் பதனிடுதலுக்கு புகழ்பெற்றது.

2014 – ஆண்டு, திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.



அணைகள்


ஆறுகள்