திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (Tirujnana Sambandar, தமிழில் அறிவுசேரர் என்று பொருள் தரும்.), அல்லது சம்பந்தர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார்

வரலாறு

கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சோழ நாட்டில் சீர்காழி என்னும் ஊரில் பிறந்தார்.

இவரது தந்தையார் சிவபாத விருதயர். தாயார் பகவதி அம்மையார்.

இவர் மூன்று வயது குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்றதாகவும், அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை, அம்மா அப்பா என்று கூவி அழுததாகவும், அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பால் ஊட்டினார். அதனைப் பருகிய குழந்தை சிவஞானத்தைப் பெற்றது.

நீராடி முடித்து விட்டு வந்த தந்தை இவரது வாயில் இருந்து பால் வடிவதைக் கண்டார்.

அது பற்றி வினவிய போது, குழந்தை கோயிலைச் சுட்டிக்காட்டித் தோடுடைய செவியன்… என்று தொடங்கும் தேவாரத்தைப் பாடியது என்றும் சொல்லப்படுகிறது.

ஆச்சாள்புரக் கல்வெட்டுத் தகவல்படி, திருஞானசம்பந்தரின் மனைவி பெயர் சொக்கியார்.

திருஞான சம்பந்தரின் வரலாற்றைப் பெரிய புராணத்தில் 1256 பாடல்களால் சேக்கிழார் சுவாமிகள் அழகுற விவரித்துள்ளார். இவர் வரலாற்றை முதன்முதல் சுந்தரர் திருத்தொண்டத் தொகையில்,

`வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்

மதுமலர்நற் கொன்றையான் அடியலால் பேணாத

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்`

எனக் குறிப்பிட்டு அருளியதோடு, தாம் அருளிய தேவாரத் திருப் பதிகங்களிலும் திருஞானசம்பந்தர் பெருமைகளைப் போற்றிப் பாடியுள்ளார்.

ஆளுடைய பிள்ளையார், பாலாராவயர், பரசமய கோலரி என்பன அவரது வேறு பெயர்களில் சிலவாகும். அவர் பதினாறு ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்து வைகாசி மூல நாளில் சொதியுட் கலந்தார்.

அற்புதங்கள்

மூன்றாம் வயதினிலே, உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டமை.

சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக்கிழியும் (பொன்முடிப்பு) பெற்றது.

வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியது.

சமணர்களை வெற்றி கொள்ள வேண்டி மதுரை சென்ற போது, மதுரைக்குக் கிழக்கு வாயில் வழியாகச் செல்ல வேண்டும் என்று கருதி, மதுரையின் கிழக்கு எல்லையாக விளங்கும் திருப்பூவணத்தின் (தற்போது திருப்புவனம் என்று அழைக்கப்படுகிறது) வைகை ஆற்றின் வடகரையை வந்து அடைந்தார்; ஆற்றில் கால் வைக்க முயன்ற போது, ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சி அளித்தன; எனவே அங்கு நின்றபடியே தென்திருப்பூவணமே என முடியும் பதிகம் பாடினார்; சிவபெருமான், நந்தியைச் சாய்ந்திருக்கச் சொல்லிக் காட்சி அருளினார்; இதனால் திருப்பூவணத்திலே நந்தி இன்றும் முதுகு சாய்ந்தே உள்ளது. வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள சிவலிங்கத்தை, வடகரையில் உள்ள ஆடித்தபசு மண்டபத்தில் நின்றே இன்றும் தரிசிக்கலாம்.

பாலை நிலத்தை, நெய்தல் நிலமாகும்படி பாடியது.

பாண்டியனுக்குக் கூனையும் சுரத்தையும் போக்கியது. தேவாரத் திருவேட்டை அக்கினியில் இட்டுப் பச்சையாய் எடுத்தது. வைகையிலே திருவேட்டை விட்டு, எதிரேறும்படி செய்தது.

சிவபெருமானிடத்தே, படிக்காசு பெற்றது.

விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.

வெள்ளெழும்பை பெண்ணாக்கியது.


1894 – ஆம் ஆண்டு, மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்கள், கல்வெட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சி செய்து அவ்வாராய்ச்சியினை வெளியிட்டார்.


சமய குரவர்கள்

திருஞானசம்பந்தர்

திருநாவுக்கரசர்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

மாணிக்கவாசகர்

சைவம் வளர்த்தோர்

சேக்கிழார்

திருமூலர்

அருணகிரிநாதர்

குமரகுருபரர்


12 ஆழ்வார்கள்

பொய்கையாழ்வார்

பூதத்தாழ்வார்

பேயாழ்வார்

திருமழிசை ஆழ்வார்

நம்மாழ்வார்

மதுரகவி ஆழ்வார்

குழசேகராழ்வார்

பெரியாழ்வார்

ஆண்டாள் நாச்சியார்

தொண்டரடிப் பொடியாழ்வார்

திருப்பாணாழ்வார்

திருமங்கையாழ்வார்


சித்தர்கள்

திருமூலர்

இராமதேவர்

கும்பமுனி

இடைக்காடர்

தன்வந்திரி

வான்மீகி

கமலமுனி

போகநாதர்

குதம்பைச் சித்தர்

மச்சமுனி

கொங்கணர்

பதஞ்சலி

நந்திதேவர்

போதகுரு

பாம்பாட்டிச் சித்தர்

சட்டைமுனி

சுந்தரானந்த தேவர்

கோரக்கர்

அகப்பேய் சித்தர்

அழுகணிச் சித்தர்

ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்

சதோகநாதர்

இடைக்காட்டுச் சித்தர்

புண்ணாக்குச் சித்தர்

ஞானச்சித்தர்

மௌனச் சித்தர்

பாம்பாட்டிச் சித்தர்

கல்லுளி சித்தர்

கஞ்சமலைச் சித்தர்

நொண்டிச் சித்தர்

விளையாட்டுச் சித்தர்

பிரமானந்த சித்தர்

கடுவெளிச் சித்தர்

சங்கிலிச் சித்தர்

திரிகோணச்சித்தர்


வான்மீகர்

பதஞ்சலியார்

துர்வாசர்

ஊர்வசி

சூதமுனி,

வரரிஷி

வேதமுனி

கஞ்ச முனி

வியாசர்

கௌதமர்


காலாங்கி

கமலநாதர்

கலசநாதர்

யூகி

கருணானந்தர்

போகர்

சட்டைநாதர்

பதஞ்சலியார்

கோரக்கர்

பவணந்தி

புலிப்பாணி

அழுகணி

பாம்பாட்டி

இடைக்காட்டுச் சித்தர்

கௌசிகர்

வசிட்டர்

பிரம்மமுனி

வியாகர்

தன்வந்திரி

சட்டைமுனி

புண்ணாக்கீசர்

நந்தீசர்

சப்த ரிஷிகள்.

அகப்பேய்

கொங்கணவர்

மச்சமுனி

குருபாத நாதர்

பரத்துவாசர்

கூன் தண்ணீர்

கடுவெளி

ரோமரிஷி

காகபுசுண்டர்

பராசரர்

தேரையர்

புலத்தியர்

சுந்தரானந்தர்

திருமூலர்

கருவூரார்

சிவவாக்கியர்

தொழுகண்

பால சித்தர்

ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்

நவநாதர் (அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ. வகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)

அஷ்ட வசுக்கள்

காரைக்கால் அம்மையார்



ஆலய அதிசயங்கள்

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம்

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்

மிக உயரமான விமானத்தை உடைய தமிழக கோயில்கள்

மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்

தெய்வங்களை பீடத்தில் அசையாமல் நிறுத்தும் `அஷ்ட பந்தன மருந்தில்’ என்னென்ன சேர்ப்பார்கள்?

பைரவர் வழிபாடு

தேங்காய் சகுணம்

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்

அமாவாசையன்று வாசலில் ஏன் கோலம் போடக் கூடாது?

சிவ சுதந்திரம்

கடவுள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?

தர்மத்தின் மதிப்பு என்ன?

தீட்டு என்கிறார்கள் இதன் உண்மையான அர்த்தங்கள் என்பது என்ன..?

108 சித்தர்களின் பெயர்கள்

பல இந்துக்கள் கூட அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்

ஏழு சக்கரங்களும், விளக்கமும்

எந்த கடவுளை வணங்குவது

கோவிலில் செய்யக் கூடாதவை

எதை விட்டுவிட வேண்டும்?

அனுமனின் திருமணக்கோலம்

மகாளய பட்சம் என்றால் என்ன?

அன்னதானத்தின் சிறப்பை கர்ணன் உணர்ந்த மகாபாரதக் கதை

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் பொன்வரிகள்

பிராணாயாம விதிமுறைகள்

கோவில்களில் ஏன் புறாக்கள் வளர்க்கப்படுகின்றது?

விளக்கேற்றக் கூடாத எண்ணெய்கள்

சூட்சும சக்தி

274 சிவாலயங்களுக்கு செல்வதற்கான குறிப்புகளை கொண்டது இப்பதிவு

63 நாயன்மார்களின் வரலாற்றுச் சுருக்கம்

மகான் அகத்தியர் தன்னுடைய நூலில் சொன்ன மரணத்தைப்பற்றிய அபூர்வ ரகசியம்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்கள்

ஆடி அமாவாசை



திருத்தலம்




விநாயகர்:



நாயன்மார்கள்