திருத்தக்க தேவர் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணப் புலவர். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி என்னும் நூலை இயற்றியவர்.

இவர் நரிவிருத்தம் என்னும் நூலையும் எழுதியுள்ளார்.

முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிலப்பதிகாரம் தமிழில் கிடைத்துள்ள காப்பியங்களில் காலத்தால் முந்தியது.

அதனோடு இணைந்த இரட்டைக் காப்பியமாகத் திகழும் மணிமேகலை பழமையான ஆசிரியப்பா யாப்புடையதாய் கால வரிசையில் அதனையொத்தது.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றிய பெருங்கதைக்குப் பின்னர் முழுதும் ஆசிரியப்பாவால் காப்பியம் எழுதும் மரபு மறைந்துபோயிற்று.

அடுத்துத் தோன்றியது விருத்தப்பா காப்பிய மரபு. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணம் நூலுக்கு முன்னர் வளர்ச்சி பெறாத விருத்தங்களாலான காப்பியப் பாங்கைத் தோற்றுவித்தவராகத் திருத்தக்க தேவர் அறியப்படுகிறார்.

இவர் தமிழ் கவிஞர்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறார்.

எழுத்துஎழுத்து


சொல்


புணர்ச்சி
பொது


அணி


இலக்கியம்
தமிழ் புலவர்கள்