திருப்பூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மாநகராட்சி.

இது புதிதாக அறிவிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டத்தின் தலை நகரமாக அமைந்துள்ளது.

இம்மாநகரம் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தில் ஏழாவது பெரிய நகரமான திருப்பூர் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஒரு தொழில் நகரமாகும்.

திருப்பூருக்கு மேலும் சிறப்பு – விடுதலைப்போரில் கொடி காத்த குமரன் பிறந்த மண் என்பதே ஆகும்.

2008, ஆகஸ்ட், 05 – அன்று, திருப்பூர் மாநகராட்சியாக அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அமராவதி அணை இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டத்தில் இருக்கும் இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்காவில் அமைந்துள்ளது.



அணைகள்


ஆறுகள்