திருவனந்தபுரம் இந்தியாவிலுள்ள கேரள மாநிலத்தின் தலைநகராகும்.
இந்நகரானது திருவனந்தபுரம் என்றழைக்கப்படும் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இந்நகரம் மகாத்மா காந்தியால் இந்தியாவின் பசுமை நகரம் என அழைக்கப்பெற்றது.
கேரளாவின் பெரிய நகரமும் அதிக நகரம் கொண்ட நகரமும் இதுவே.
இந்திய நடுவணரசின் ஆய்வுக்கழகங்களும் கேரள மாநில அரசின் அலுவலங்களும் இங்கே உள்ளன.
இந்நகரம் கேரளாவின் சிறந்த நகரமாக அறியப்படுகிறது.
மேலும் கேரள மாநில உள்ளாட்சி அமைப்பின்படி சுமார் நூறு (100) வார்டுகளைக் கொண்ட கேரள மாநிலத்தின் மிகப்பெரிய மாநகராட்சி ஆகும்.
இந்தியாவின் முதல் விண்வெளி தொழில்நுட்ப பூங்கா திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.