திருவள்ளுவர்  பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர். இவரது காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதகைக் கொண்டே திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த புலவரான மாமூலனார் மற்றும் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் பற்றிய குறிப்புகள் ஓலைச்சுவடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்க கால புலவரான ஔவையார், அதியமான், மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

திருவள்ளுவர், அனைத்து தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும் தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார்.

வாழ்க்கை

திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் கி.மு. முதல் நூற்றாண்டில், தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவிரிப்பக்கம் அருகில் வாழ்ந்து வந்த மார்கசெயன் என்பவர் அவரது கவித்திறன் கண்டு அவரது ஒரு புதல்வியான வாசுகியை வள்ளுவருக்கு மணம் முடித்ததாகவும் அறியப்படுகிறது.

மதுரை நகரில் வாழ்ந்ததாகவும் கருத்துண்டு.

சிறப்புப் பெயர்கள்

 • தேவர்
 • நாயனார்,
 • தெய்வப்புலவர்,
 • செந்நாப்போதர்,
 • பெருநாவலர்,
 • பொய்யில் புலவர்
 • பொய்யாமொழிப் புலவர்
 • மாதானுபங்கி
 • முதற்பாவலர்
 • என்று பல சிறப்புப்பெயர்களாலும் அழைப்பர்.

புலவர்களின் பாராட்டுகள்

பல புலவர்கள் இணைந்து தொகுத்த, திருவள்ளுவமாலை என்னும் நூலின் மூலமாக இதன் சிறப்பினை அறியலாம்.

இவரை,

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என பாரதியாரும்,

“வள்ளுவனைப் பெற்றதால்

பெற்றதே புகழ் வையகமே”

என பாரதிதாசனும் புகழ்ந்து பாடியுள்ளனர்.

இயற்றிய நூல்கள்

திருக்குறள்

திருக்குறள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

அவையாவன அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகும்.

திருக்குறலில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளது.

ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 பாடல்கள் வீதம் மொத்தம் 1330 பாடல்கள் உள்ளது.

திருக்குறள் பதினென்கீழ்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.

இதன் வேறு பெயர்களாவன முப்பால், உலகப் பொதுமறை மற்றும் தமிழ்மறை ஆகும்.

இது தவிர மருத்துவம் பற்றிய இரு நூல்களை இவர் வழிவந்த வள்ளுவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது.

அவரையும் திருவள்ளுவர் என்றே அழைத்தனர். அவை

 • ஞான வெட்டியான்
 • பஞ்ச ரத்னம்

நினைவுச் சின்னங்கள்

முதன்மைக் கட்டுரைகள்: அய்யன் திருவள்ளுவர் சிலைமற்றும் வள்ளுவர் கோட்டம்

இந்தியாவின் தென் கோடியில் தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை

தமிழ்நாடு அரசு 133 அடி உயரமுள்ள திருவள்ளுவர் சிலை ஒன்று அவரின் நினைவாக நிறுவியுள்ளது.

இது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் அமைந்துள்ளது. இந்த சிலையை வடிவமைத்தவர், பிரபல சிற்பி, கணபதி ஸ்தபதி என்பவர்.

சென்னையில் வள்ளுவர் நினைவாக, வள்ளுவர் கோட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

வள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 1330 குறள்களும், இங்குள்ள குறள் மண்டபத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கோயில் தேர் போன்ற தோற்றமுடைய நினைவிடமும் உள்ளது.


திருக்குறல் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிவடைகிறது.

குறள் 1

கர முதல எழுத்தெல்லால் ஆதி பகவான் முதற்றே உலகு.

குறள் 1330

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடிய முயங்கப் பெறின்.


சிறப்புகள்

திருக்குறளில் தமிழ் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் – 42,194

திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247 – ல் 37 எழுத்துகள் மட்டுமே இடம் பெறவில்லை.

திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை

திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம்

திருக்குறளில் இடம் பெறும் ஒரே விதை – குன்றிமணி

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஔ

திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில்

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட எழுத்து – னி (1705)

திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங

திருக்குறளில் இடம் பெறாத ஒரே எண் – ஒன்பது

திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.

திருக்குறளில் ஆங்கிலத்தில் 40 பேர் இதுவரை மொழி பெயர்த்துள்ளனர்.


திருக்குறளின் மொழிப்பெயர்புகள்

மொழிபெயர்த்தவர்மொழிபெயர்த்த மொழி
வீரமாமுனிவர்இலத்தின்
ஜி.யு.போப், எல்லீஸ்துரை, கிண்டர்ஸ்லே, வா.வே.சு.ஜயர், பூர்ணலிங்கம், இராஜாஜிஆங்கிலம்
டாக்டர்.கிரௌல் ஜெர்மனி
ஏரியல்பிரென்சு
தால்சுதாய் ரஷ்யன்
பி.டி.ஜெயின்இந்தி
வைத்திநாத தேசிகர்தெலுங்கு

1812 ஆம் ஆண்டு, மலையத்துவசன் மகன் ஞானபிரகாசம் அவர்கள் முதன் முதலில் திருக்குறளை பதிப்பித்து, தஞ்சையில் வெளியிட்டார்.

1886 ஆம் ஆண்டு, கனடாவைசை சேர்ந்த ஜார்ஜ் உக்லோ போப் என்பவர் திருக்குறளை Sacred Kural என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

மதுரை பொற்றாமரைக் குளத்தின் சுவரில் திருக்குறளின் 1330 குறட்பாக்கள் பதிக்கப்பட்டுள்ளன.