துக்ளக் வம்சம் (Tughlaq dynasty) (ஆட்சிக் காலம்: 1321 – 1413) மத்தியகால இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட துருக்கியர்களின் வழி வந்த சன்னி இசுலாமிய மரபாகும்.

துக்ளக் வம்சத்தின் முதல் சுல்தான் கியாசுதின் துக்ளக் ஆவார்.

இறுதி சுல்தான் நுஸ்ரத் ஷா துக்ளக் ஆவார்.

துக்ளக் வம்ச சுல்தான்களில் பெரும் புகழ் பெற்றவர் முகமது பின் துக்ளக் ஆவார்.

துக்ளக் வம்ச சுல்தான்கள், தில்லி சுல்தானகத்தை 77 ஆண்டுகள் ஆண்டனர்.

கி பி 1330 – 1335 கால கட்டத்தில் துக்ளக் பேரரசு இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதிகளை தன்னுள் கொண்டது.

கி.பி. 1323 ஆம் ஆண்டில், மதுரை உட்பட பாண்டிய சாம்ராஜ்யம் தில்லி பேரரசின் ஒரு மாகாணமாக, துக்ளக் ஆட்சியின் கீழ் மாறியது.

1388க்கு பின்னர் துக்ளக் பேரரசு படிப்படியாக வீழ்ச்சி கண்டது.

ஆட்சியாளர்கள்

  • கியாசுதீன் துக்ளக் 1321–1325
  • முகமது பின் துக்ளக் 1325–1351
  • பெரோஷா துக்ளக் 1351–1388
  • கியாசுதீன் துக்ளக் ஷா 1388–1389
  • அபுபக்கர் ஷா துக்ளக் 1389–1390
  • முகமது ஷா துக்ளக் 1390–1394
  • அலாவூதீன் சிக்கந்தர் ஷா 1394
  • சுல்தான் நசீர் உத்தீன் மகமது ஷா துக்ளக் 1394–1412/1413
  • சுல்தான் உத்தீன் நுஸ்ரத் ஷா, 1394–1398 தில்லி
  • நசீர் உத்தீன் ஷா துக்ளக் 1394–1398 பெரோஷாபாத்

துக்ளக் சுல்தானகத்தின், கிழக்கில் பெரோஷாபாத் மற்றும் தில்லியை தலைநகராகக் கொண்டு இரண்டு துக்ளக் சுல்தான்கள் ஆட்சி செய்தனர்.



கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….