2014, ஜூன், 2 – அன்று முதல், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக செயல்படத் தொடங்கியது.
2022, அக்டோபர், 08 – தெலங்கானா மாநிலத்தின் கமாரெட்டி என்ற மாவட்டத்தில் உள்ள ‘ரெகாட்லாப்பள்ளி‘ என்ற கிராமத்தில், சுமார் 180 குடும்பங்களைக் கொண்ட 930 பேர் வசித்து வருகிறார்கள். கடந்த 40 வருடங்களாக எந்த குற்றமும் இந்த கிராமத்தில் நிகழவில்லை, மேலும் இந்த கிராமத்தை ‘வழக்குகள் இல்லாத கிராமம்’ என அறிவித்து நீதிபதி சான்றிதழ் வழங்கினார்.
தெலங்காணா (Telengana, தெலுங்கு: తెలంగాణ) அல்லது தெலுங்கானா என்பது இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒன்றாகும்.
தெலுங்கானா என்பதன் மொழிபெயர்ப்பு தெலுங்கர்களின் நாடு என்பதாக அமையும். இங்குதான் தெலுங்கு மொழி பிறந்ததாகக் கருதப்படுகிறது. இது முன்னர் ஐதராபாத் நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் ஆட்சிப்பகுதியைத் தெலுங்கு பேசும் பகுதிகளை உள்ளடக்கியது. தெலங்காணாவை ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து பிரித்து தனிமாநிலமாக்க 2013-ஆம் ஆண்டு சூலை 30-ஆம் தேதி நடைபெற்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.[9]
கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கில் தக்காணத்தில் அமைந்துள்ள இந்த மண்டலத்தில் ஆந்திர மாவட்டங்கள் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப்நகர், நல்கொண்டா, ரங்காரெட்டி, கரீம்நகர், நிசாமாபாத், மேதக் ஆகியனவும் மாநிலத் தலைநகர் ஐதராபாத்தும் அடங்கும். கோதாவரி மற்றும் கிருட்டிணா ஆறுகள் இம்மண்டலத்தில் மேற்கிலிருந்து கிழக்காகப் பாய்கின்றன.
1947ஆம் ஆண்டு இந்தியா பிரித்தானிய அரசிடமிருந்து விடுதலை பெற்றது. ஆனால் ஐதராபாத்தின் நிசாம் தமது தன்னாட்சியை தொடர விரும்பினார். புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17, 1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கை மூலம் ஐதராபாத் நாட்டை அகப்படுத்திக்கொண்டது. கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951 வரை தொடர்ந்தது.
இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமசுதானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்சு காலனி ஏனாமிலும் இருந்தன. பொட்டி சிரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராசு மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது.
திசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் சவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார். உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது. அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர் 1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு, நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு (Gentlemen’s agreement of Andhra Pradesh (1956) ஒன்றை அளித்தது.
இந்தியாவின் 29வது மாநிலமான தெலங்கானா, 4 சூன் 2014-இல் புதிதாக நிறுவப்படும் போது ஆதிலாபாத், ஐதராபாத், கரீம் நகர், கம்மம், மகபூப்நகர், மேடக், நல்கொண்டா, நிசாமாபாத், ரங்காரெட்டி, வாரங்கல் என பத்து மாவட்டங்களை மட்டும் கொண்டிருந்தது.
மக்களின் சமூக, கல்வி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பழைய பத்து மாவட்டங்களின் பகுதிகளை பிரித்து 21 புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டியிருந்தது. எனவே 11 அக்டோபர் 2016 அன்று, ஏற்கனவே உள்ள பத்து மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு 21 புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.[53][54][55] பிப்ரவரி, 2019-இல் நாராயணன்பேட்டை மாவட்டம் மற்றும் முலுகு மாவட்டம் புதிதாக நிறுவபப்ட்டது.
தெலங்கான மாநிலத்தின் முக்கிய நகரங்கள்; ஐதராபாத், வாரங்கல், நிசாமாபாத், கரீம்நகர், கம்மம், ராமகுண்டம், மகபூப்நகர், நல்கொண்டா, ஆதிலாபாத், பத்ராச்சலம், கொத்தகூடம் மற்றும் சூர்யபேட்டை ஆகும்.
தெலங்கானா மாநிலத்தில் ஆறு மாநகராட்சிகளும், முப்பத்து எட்டு நகராட்சிகளும், இருபத்து ஐந்து நகரப் பஞ்சாயத்து மன்றங்களும், 443 உறுப்பினர்களுடன் கூடிய ஒன்பது மாவட்ட ஊராட்சி முகமைகளும், 6497 உறுப்பினர்களுடன் கூடிய 443 மண்டல மக்கள் மன்றங்களும், 8778 ஊராட்சி மன்றங்களும் உள்ளது.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து