தொகை என்னும் சொல்லுக்கு தொகுத்தல் அல்லது விரித்தெழுதுதல் என்று பொருள். ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப் பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும். சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு,

 1. இருவினை தன்வினை, பிறவினை / நல்வினை, தீவினை
 2. இருதிணை உயர்திணை, அஃறிணை / அகத்திணை, புறத்திணை
 3. இருசுடர் சூரியன், சந்திரன்
 4. இருவகை அறம் இல்லறம், துறவறம்
 5. ஈரெச்சம் வினையெச்சம், பெயரெச்சம்
 6. முந்நீர் ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
 7. முத்தமிழ் இயல், இசை, நாடகம்
 8. முப்பால் அறம் பொருள்  வீடு
 9. முக்கனி மா, பலா, வாழை
 10. முக்காலம் நேற்று, இன்று, நாளை
 11. முத்தொழில் ஆக்கள், அழித்தல், காத்தல்
 12. மூவிடம் தன்மை, முன்னிலை, படர்க்கை
 13. மூவேந்தர் சேரன், சோழன், பாண்டியன்
 14. நால்வர் சுந்தரர், சம்பந்தர், சம்பந்தர், மாணிக்கவாசகர்
 15. நாற்றிசை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
 16. நானிலம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
 17. நாற்குணம் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (பெண்), அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைபிடி (ஆண்)
 18. நாற்பால் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்
 19. நான்மறை ரிக், யசூர், சாமம், அதர்வணம்
 20. நாற்படை தேர், யானை, குதிரை, காலாள்
 21. ஐம்பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
 22. ஐம்புலன் தொடுவுணர்வு, உண்ணல், மோத்தல், காணல், கேட்டல்
 23. ஐம்பொறி மெய், வாய், மூக்கு, கண், செவி
 24. ஐம்பூதம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்
 25. ஐந்திலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
 26. ஐந்தொகை முதல், வரவு, செலவு, இருப்பு, ஆதாயம்
 27. ஐவகை பாக்கள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
 28. ஐப்பெருங்காப்பியம் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி
 29. ஐஞ்சிறுகாப்பியம் உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி
 30. அறுசுவை இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு
 31. ஏழு பருவம் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண்
 32. எழு பிறப்பு தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, பறப்பன, தாவரம்
 33. கடையேழு வள்ளல்கள் பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நல்லி, ஓரி
 34. மலரின் ஏழு பருவங்கள் அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல்
 35. அகத்திணை ஏழு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை
 36. எட்டுத்திக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு
 37. நவதானியம் நெல், கோதுமை, உளுந்து, கொள்ளு, எள், பயறு, கடலை, துவரை, அவரை
 38. நவரசம் நகை, அழுகை, இழிவு, வியப்பு, அச்சம், வெகுளி, பெருமிதம், உவகை, அமைதி
 39. நவரத்தினம்/நவமணி வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்
 40. தசாவதாரம் மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசுராமன், இராமன், பலதேவன், கண்ணன், கல்கி
 41. பத்தழகு சுருங்கச் சொல்லல், விளங்கச் சொல்லல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, உலகமலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்கு உதாரணந்து ஆகுதல்.
 42. பன்னிரெண்டு இராசிகள் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்
 43. புறத்திணை 12 வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை
 44. பதினாறு பேறு கலையாத கல்வி, கபடற்ற நட்பு, குறையாத வயது, குன்றாத வளமை, போகாத இளமை, பரவசமான பக்தி, பிணியற்ற உடல், சலியாத மனம், அன்பான துணை, தவறாத சந்தானம், தாழாத கீர்த்தி, மாறாத வார்த்தை, தடையற்ற கொடை, தொலையாத நிதி, கோணாத செயல், துன்பமில்லா வாழ்வு