இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம்.

எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஜெபித்து விட்டு செய்வதும் , ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம்.

அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது .
” திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை ” என்று அடிக்கடி சொல்லும்.

அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை.
விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது.

நேரம் போவதே தெரியவில்லை . உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது.

காயம் எதுவும் பட வில்லையென்றபோதிலும், கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.
“பெரிய ஆபத்திலேர்ந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே. உங்களுக்கு நன்றி” என்றது.

இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. “கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன்” என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.

பக்தியுள்ள அணில் சொன்னது ,
“கடவுளை நம்புற நாங்கள்லாம்
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.
அதனால கடவுள் எங்கள கீழே தள்ளிவிட்டாலும் அதுலயும் காரணம் இருக்கும்” என்றது.

ஆமாமாம், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை “மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது, கண்களை மூடி விண்ணை நோக்கி, “கடவுளே, இந்த அவமானத்துக்கும், வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க” என்றது.

அது கண்களைத் திறக்கும்போது ஒரு கொடூரமான காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது.

அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்துகொண்டிருந்
தது. “டேய் , உன் பக்கத்துல பாம்புடா” என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் ஏறவில்லை.

கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பு மரத்தில் இருந்த அணிலை லபக்கென்று கவ்விக் கொண்டது . தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும்போது அது முழுமையாய் விழுங்கப் பட்டிருந்தது.

சில வேளையில் நாம் தடுமாறி விழும்போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்முடைய உயிரை காப்பதற்காகக் கூட இருக்கலாம். நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடமேது ?


சிறுகதைகள்

தன்னிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவான் | சிறுகதை

நீயும் (கொஞ்சமாவது) முயற்சி செய் | சிறுகதை

மூன்று கேள்விகள் | சிறுகதை

போக்குவரத்து விதிகளை மீறினால்? சிறுகதை

சுட்ட நாக்கு | சிறுகதை

எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும் | சிறுகதை

பொறுமை தான் உறவுகள் நீடிக்கக் காரணம் | சிறுகதை

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது

மை… மை… மை…. | சிறுகதை


சிந்தனைகள்

எது சின்ன பாவம்? எது பெரிய பாவம்? | சிந்தனைகள்

இது தான் வாழ்க்கை

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள்

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது

மனிதனின் வெற்றிகள் | சிந்தனைகள்

அற்புத உரைகல் | சிந்தனைகள்

நாம் எப்படியோ நம் எண்ணங்களும் அப்படியே | சிந்தனைகள்

எதுக்குங்க நம்ம முன்னோர்கள் போராடி சுதந்திரம் வாங்கினாங்க


நகைச்சுவை

கல்யாணம் பண்ணவனுக்கு ஏதுடா நிம்மதி? | நகைச்சுவை

பேருந்தில் இருவருக்கு இடையே சண்டை | நகைச்சுவை


தமிழர்கள்களின் நுண்ணறிவு

கிணத்து தண்ணி யாருக்கு?

எலிப்பொரியும் எஜமானியும் – நீதி கதை

மன்னரின் பணிவு கண்டு வியந்த அமைச்சர்

உலகின் மிக வயதான சீன பாட்டி

நாம் உயபயோகிக்கும் பணம் எங்கெல்லாம் செல்கிறது?

நேர்மைக்கு கிடைத்த மரியாதை

புத்திசாலி அரசனின் சாமர்த்தியம்

ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்

கூண்டில் வளர்க்கப்பட்ட எலி

சமையலில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத செயல்கள்

குளிர்பதனப்பெட்டி (ஃபிரிட்ஜ்) பராமரிப்பு பற்றிய சில தகவல்கள்

நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை

அச்சம் ஒருவனை முட்டாளாக்கிவிடும்

வாழ்க்கையில் துன்பம் துயரம் வந்தால்?

ஆரத்தி எடுப்பது ஏன்?

விதியா? மதியா?

திறுநீறும் ருத்ராஷமும்

கு(ட்)டி முதலை

நாம் நாமாகவே இருப்போம்

ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலுக்குப் போய் இருக்கிறீர்களா?

பட்டுக்கயிறு

வாழ்க்கைப்படும் பாடு

முயல் ஆமை

எது உண்மையான அமைதி

முதலையும் சிறுவனும்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்

புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க

எனக்கு மெயில் ஐடி இல்லை..

பணம் என்பது வெறும் காகிதம் மட்டுமே

கடவுள் பக்தி

கிருஷ்ண பக்தி கதை

மனிதனின் மதிப்பு

இந்தக் கடல் மாபெரும் திருடன்

பிஸினெஸ் தந்திரங்கள்

எங்கே? எங்கே?

யாரங்கே?

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன ?

தர்மராஜா தலைகுனிந்தார்

தீங்கு இல்லாத விவசாயத்தை மேற்கொள்வோம்

உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்

ஒரு குழந்தை எழுதிய கட்டுரை

நம் மகன்

நிஜமான தர்மவான்!

இது ஒரு சுலபமான புதிர் – முயற்சியுங்கள்

குலதெய்வம்

எண்ணங்கள் அழகானால், எல்லாம் அழகாகும்

வார்த்தையின் சக்தி

புத்திசாலி இளைஞன்

புத்திசாலி சிறைக்கைதி

புதிர் கதை

தமிழனின் தொழில்நுட்பம்

விளம்பரத்தின் வலிமை

நண்பனா? எதிரியா?

இந்த நிலை மாறும்

பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?

ஏன் ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது என தெரியுமா?

தொலைக்காட்சியின் கதை

முயற்சி செய்

வாழ்க்கையின் பயனுள்ள குறிப்புகள்

தவளை

புறா

சண்டை

மகிழ்ச்சி உங்களை தேடி வர

பொக்கை வாய்

முன்னேறு

நானூம் அந்த சமயத்தில் கண்னை மூடிக்கொன்டிருந்தேன்

உளவியல் ரகசியங்கள்

‍கொக்கு

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்…

பல இந்துக்கள் கூட அறியாத இந்துக் கடவுள்களின் அற்புதங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவணிக்க வேண்டிய 16 விசயங்கள்

மறந்துவிட்டேன்

கெடாமல் பாதுகாக்க வேண்டியது

நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல்…

தமிழர்கள்

உண்மையான அன்பை பிறருக்குக் கொடு

நடப்பதெல்லாம் நன்மைக்கே

சொந்த வீடு கட்டுவோர்க்கு 50 டிப்ஸ்

உழைப்பவரை என்றும் வறுமை அண்டுவதில்லை

பிச்சை ஓடு

வாழ்க்கையில் எல்லாரும் ஒன்று தான்

ஆனைக்கு (ஆ+நெய்) ஒரு காலம் வந்தால்… பூனைக்கு (பூ+நெய்) ஒரு காலம் வரும்…இது ஒரு பழமொழி

நாம் மறந்த விளையாட்டுகள்

பெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்

காமராஜரின் நட்பு

2020 ஆம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு