1963, டிசம்பர், 1 – அன்று நாகாலாந்து ஒரு மாநிலமாக உருவாக்கப்பட்டது.

நாகாலாந்து (Nagaland) இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும்.

இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மற்றும் அயல் நாடான மியன்மார் என்பன இதனோடு எல்லைகளைக் கொண்டுள்ளன.

இதன் மாநிலத் தலைநகரம் கோகிமா ஆகும்.

நாகாலாந்து பதினோறு நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இம் மாநிலத்தில் 16 முக்கிய இனக்குழுக்கள் வாழுகின்றன.

இன அடிப்படையில் இவர்கள் இந்தோ-மொங்கொலொயிட் இனப்பிரிவைச் சேர்ந்த நாகா இனக் குழுக்கள் ஆவார்.

பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினத்தவராக உள்ள இம்மாநிலத்தில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) -0.58% ஆக குறைந்துள்ளது.

இது கிருஸ்தவர்கள் அதிகம் வழும் இந்திய மாநிலம் ஆகும்.

இம்மாநிலத்தின் ஆட்சி மொழி ஆங்கிலம் ஆகும்.

இந்தியா மற்றும் மியான்மரின் எல்லையின் அமைந்துள்ள கிராமம் – லாங்வா கிராமம்

உலகின் பால்கான் தலைநகரம் என்று நாகலாந்து அழைக்கப்படுகிறது.

மேலும் இது பண்டிகைகளின் நிலம் என்று நாகலாந்து அழைக்கப்படுகிறது.

நாகாலாந்தின் மிகப்வும் பிரபலமான திருவிழா ஹார்ன்பில் திருவிழா ஆகும்.

2001 முதல் 2011 வரை மக்கள்தொகை சரிவை பதிவு செய்த இந்தியாவின் முதல் மற்றும் ஒரே மாநிலம் நாகாலாந்து ஆகும்.

2021, பிப்ரவரி, 20 – அன்று 1963 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் 58 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நாகாலாந்து சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடப்பட்டது.

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்