நாட்டுப்புறப் பாடலினை பின்வரும் வகையாக பிரிக்கலாம்,

  1. தாலாட்டுப் பாடல்கள்
  2. விளையாட்டுப் பாடல்கள்
  3. தொழில் பாடல்கள்
  4. சடங்குப் பாடல்கள்
  5. கொண்டாட்டப் பாடல்கள்
  6. வழிபாட்டுப் பாடல்கள்
  7. ஒப்பாரிப் பாடல்கள்

எழுத்து வழியாக வராமல் பாடிப்பாடி வாய்வழியாகப் பரவுவது நாட்டுப்புறப் பாடல் ஆகும்.

குழந்தைக்கு தாய் தொட்டிலிட்டு பாடும் பாட்டு தாலாட்டுப் பாடல் ஆகும். முற்காலத்தில் தாலாட்டுப் பாடல்களை கிராமியப் பாடல்கள் என்று கூறிவந்தனர்.‍‍

சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் பாடும் கானா பாடல் கூட நாட்டுப்புறப் பாடல் வகையைச் சேர்ந்ததே ஆகும்.

கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் நாட்டுப்புறப் பாடலினைப் பாடி உடல் சோர்வினை போக்கிக்கொள்கின்றனர்.

பிறந்த குழந்தைக்குப் பாடும் பாடல் தாலாட்டுப் பாடல் ஆகும்.‍

கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்க பாடும் பாடல் விளையாட்டுப் பாடல் ஆகும்.

களைப்பு நீங்க வேலை செய்வோர் பாடுவது தொழில் பாடல் ஆகும்.

திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் பாடும் பாடல் சடங்குப் பாடல் மற்றும் கொண்டாட்டப் பாடல் ஆகும்.

கடவுளை வழிபடுவோர் பாடுவது வழிபாட்டுப் பாடல் ஆகும்.

இறந்தோர்க்குப் பாடும் பாடல் ஒப்பாரி ஆகும்.