நான்மணிக்கடிகையானது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்.

கடிகை என்பதன் பொருள் அணிகலன், துண்டு, ஆபரணம்.

நான்மணிக்கடிகை என்பதன் பொருள் – நான்கு மணிகளைக் கொண்ட அணிகலன் என்பதாகும்.

நான்மணிக்கடிகையின் ஆசிரியர் – விளம்பிநாகனார் ஆவார்.

விளம்பி என்பது ஊர்ப்பெயர், நாகனார் என்பது அவரது இயற்பெயராகும்.

‘இளமைப் பருவத்துக் கல்லாமைக் குற்றம்’ – என்படு போன்ற சிறந்த கருத்துடைய பாடல்களைக் கொண்டுள்ளது.