1888, அக்டோபர், 19 அன்று, இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமன் – அம்மணியம்மாளுக்கும் ஆகியோருக்கு எட்டாவது மகனாக பிறந்தார்.

இவர் ஓவியக்கலையிலும் வல்லவர். மேலும், சிறந்த விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

காந்தியடிகளின் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்குபெற்றதால் சிறைத் தண்டனை பெற்றார்.

உப்புச் சத்தியாகிரகத்தில் தொண்டர்கள் வழிநடைப் பாடலாகப் பாடுவதற்கு கவிஞர் இயற்றிய

‘கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தி யத்தின் நித்தி யத்தை

நம்பும் யாரும் சேருவீர்’

என்னும் பாடல் விடுதலைப் போராட்ட வீரர்கள் அனைவராலும் உணர்ச்சியுடன் பாடப்பெற்ற புகழ்மிக்க பாடலாகும்.

கவிஞரின் நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் மாநில அரசு இவரை அரசவைக் கவிஞராகவும், பின்னர் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் நியமித்துச் சிறப்பித்தது.

நடுவணரசு அவர்க்குப் ‘பத்மபூஷன்’ விருதளித்துப் போற்றியது.

1972, செப்டம்பர், 24 – அன்று, கவிஞர் அவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தார்.