நாய் | மனிதனின் உற்ற நண்பன்நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும்.

இன்று பெரும்பாலும் மனிதர்களோடு வாழ்கின்றது.

இன்றுள்ள வளர்ப்பு நாய்கள் ஏறத்தாழ 17,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் ஓநாய்களைப் பழக்கி நாயினமாக வளர்த்தெடுக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது.

மறைந்த உயிரினப் படிவத்தில் இருந்து பெற்ற டி.என்.ஏ (DNA) க்களைக் கொண்டு 150,000 ஆண்டுகளுக்கு முன்னமேயே கூட நாய்கள் பழக்கப்பட்டிருக்கலாம் என எண்ண வாய்ப்பிருக்கின்றது என்பர்.

நாய்கள் மனிதர்களை விரும்பி, மனிதர்களை அண்டி வாழ்கின்றது. நாய்கள் மனிதனின் நண்பன் என்று பரவலாக கருதப்படுகிறது.

நாய்கள் மனிதர்களுக்குக் காவல் நாய்களாகவும், ஆடுமாடுகளை மேய்க்கப் பயன்படும் மேய்ப்பு நாய்களாகவும், வேட்டையாட உதவும் வேட்டை நாய்களாகவும், பனிப்பகுதிகளிலே சறுக்குப்பொதிகளை இழுத்துச் செல்வது போன்று பணிபுரியும் நாய்களாகவும் (இழுநாய்), கண்பார்வை இழந்தவர்களுக்குத் துணையாக வழிகாட்டு நாய்களாகவும், பல்வேறு வழிகளிலே துணை நிற்கின்றன.

சீனா போன்ற சில நாடுகளில் நாய் இறைச்சி, உணவாக உட்கொள்ளப்படுகிறது.

அறிவுத்திறன்

நாய்களுக்கு ஓரளவுக்கு அறிவுத்திறனும் மிக நல்ல மோப்பத் திறனும் உண்டு.

மிகக்குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலிகளையும் (16–20 Hz) மிக அதிக அதிர்வெண் ஒலிகளையும் (70 kHz – 100 kHz) கேட்க வல்லவை.

நாய்களுக்கு காணும் திறத்தில், கருப்பு-வெள்ளையாக இருநிறப் பார்வை மட்டும் தான் உள்ளது என்று கருதுகிறார்கள்.

நாய்களின் மோப்பத்திறன் மிகவும் கூர்மையானது.

நாய்களுக்கு 220 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் (cells) இருப்பதாகக் கண்டுள்ளனர்.

ஆனால் மனிதர்களுக்கு சுமார் 5 மில்லியன் நுகர்ச்சிக் கண்ணறைகள் தாம் உள்ளன.

மனிதனால் விண்ணிற்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு லைக்கா என்னும் நாய்.