நாளந்தா பல்கலைக்கழகம்- நாளாந்தா என்பதற்கு அறிவை அளிப்பவர் என்று பொருள்.

இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (415 – 455) நிறுவப்பட்டது.

பின்வந்த ஹர்ஷவர்தனரும் இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார்.

நாளந்தா நகரம் பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது மகாயான புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது.

1197ல் பக்டியார் கில்ஜி என்ற துருக்கியரின் படையெடுப்பில் முற்றாக அழிக்கப்பட்டது .

இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது.

இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள்.

இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது.

மகாயான பௌத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது.

வட மொழியே இங்கு பயிற்று மொழியாக இருந்தது.

இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

யுவான் சுவாங் இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.

அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 3,000 மாணவர்களும் 541 ஆசிரியர்களும் இருந்துள்ளனர்.

இப்பல்கலைக்கழக்த்தின் புகழ் பெற்ற ஆசிரியர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்.

2014 , ஆகஸ்ட், 29 – ஆம் நாள் முதல் நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடன் முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.

2016 , ஜுலை, 15 – ஆம் நாள், நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனேஸ்கோ அமைப்பு உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.




சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3000 – கி.மு. 2500)

மகாவீரர் (கி.மு. 599 – கி.மு. 527)

கௌதம புத்தர் (கி.மு. 563 – கி.மு. 483)




கி.பி. 1201 முதல் கி.பி 1500 ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1700 ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆண்டு வரை



கி.பி. 1801 முதல் கி.பி 1850 ஆண்டு வரை


கி.பி. 1851 முதல் கி.பி 1900 ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 1951 ஆண்டு வரை


கி.பி. 1951 முதல்



புதிய கற்காலம்


சங்ககால தமிழ் புலவர்கள்

கம்பர் (கி.பி. 12 ஆம் நூற்றாண்டு)