உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது தைராய்டு ஆகும்.

ஹார்மோன்களை சுரப்பவை நாளமில்லா சுரப்பிகளாகும் (Endocrine glands).

நாளமில்லா சுரப்பிகளைப் பற்றி படிக்கும் படிப்பிற்குப் பெயர் உட்சுரப்பியல் (Endocrinology) என்று பெயர்.

மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருட்களை சுரந்து உடல் வளர்ச்சிகுகு நரம்பு மண்டலத்துடன் துணை நிற்பது நாளமில்லா சுரப்பிகளாகும்.

ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது நாளமில்லா சுரப்பிகளாகும்.

நாளமில்லா சுரப்பிகளின் தலைமைச் சுரப்பி (Master Gland) பிட்யூட்டரி சுரப்பி ஆகும்.

எலும்பு மற்றும் இரத்தத்திலு உள்ள கால்சியத்தின் அளவை பாராதைராய்டு சுரப்பி கட்டுப்படுத்துகிறது.

மற்ற சுரப்பிகளை தூண்ணும் Trophic Hormone -களை சுரப்பது பிட்யூட்டரி சுரப்பி ஆகும்.

மனித உதலில் நாளமுள்ள, நாளமில்லா சுரப்பியாக செயல்படும் உறுப்பு கணையம் ஆகும்.

ஆளுமை ஹார்மோன் என்பது தைராக்ஸின் ஆகும்.

அவசர காலங்களில் சுரக்கும் ஹார்மோன் அட்ரீனலின் ஆகும்.

Flight or Flight Hormone என்று அழைக்கப்படுவது அட்ரீனலின் ஹார்மோன் ஆகும்.

கணையத்திலுள்ள லாங்கர் ஹான் திட்டுகளிலிருந்து இன்சுலின், குளுக்கோகன் ஆகிய ஹார்மோன்கள சுரக்கின்றன.

சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் வாஸோபிரஸ்ஸின் ஆகும்.

மனித உடலிலுள்ள இருவகை சுரப்பிகள் – நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள்.

நாளமில்லா சுரப்பிகள்இருப்பிடம்
பிட்யூட்டரி சுரப்பிமூளையின் அடிப்பகுதி
பீனியல் சுரப்புமூளையின் அடிப்பகுதி
தைராய்டு சுரப்பிகழுத்து
தைமஸ் சுரப்பிமார்புக்கூடு
கணையம்வயிற்றின் அடிப்பகுதி
அட்ரினல் சுரப்பிசிறுநீரகத்தின் மேல்
இனப்பெருக்க உறுப்புகள்இடுப்புக்குழி








தாவரவியல்


மனித உடல் பாகங்கள்