நீர்யானை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியாகும்.

இது ஒரு தாவர உண்ணி ஆகும்.

கூட்டங்களாக வாழும்.

ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும்.

இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.

இவை 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200 கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளைவிட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை.

ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன.

நீர் யானைகள் மனிதனை விட வேகமாக ஓடக்கூடியது.









தாவரவியல்


மனித உடல் பாகங்கள்