1789 ஆம் ஆண்டு நீலகிரி பிரிட்டிஷ் அரசிடம் கொடுக்கப்பட்டவுடன், அது கோயம்புத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது.
1818 – ஆம் ஆண்டு அப்போதைய கோயம்புத்தூர் மாவட்ட அட்சியர் ஜான் சுல்லிவன் அவர்களின் உதவியாளர்கள் திரு விஸ் மற்றும் கிண்டர்ஸ்லி ஆகியோர் ரங்கசாமி சிகரத்தில் உள்ள கோத்தகிரி என்னும் இடத்தை கண்டறிந்தனர்.
1868, ஆகஸ்ட் மாதம் – நீலகிரி கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. ஜேம்ஸ் வில்கின்சன் பிரிக்ஸ் நீலகிரியின் ஆணையராக நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார்.
1882 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேம்ஸ் வில்கின்சன் நீலகிரி மாவட்டத்தை அமைத்தார் பின் ஆணையர் இடத்தில் ஒரு ஆட்சியர் நியமிக்கப்பட்டார்.
1882,பிப்ரவரி, 1 – ஆம் தேதி, ரிச்சர்ட் வெலெஸ்லி பார்லோ நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஆனார்.
2021, டிசம்பர், 08 – அன்று, நீலகிரி மாவட்டம், குன்னூரில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் இத்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் (The Nilgiris district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும்.
நீலகிரி என்றால் நீலநிற மலைகள் என்று பொருள்.
நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது.
இவர் கோவையிலிருந்து நீலகிரிக்கு முதன்முதலாக பாதை அமைத்தார்.
இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது.
இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும்.
இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும்.
குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள்.
இம்மாவட்டத்தில் வெல்லிங்டன் பாசறை நகரம் உள்ளது.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம், உயிர்க்கோள் காப்பகமாக ஐக்கிய நாடுகள் சபை ‛UNESCO’ அறிவித்துள்ளது நீலகிரிக்கு பெருமை சேர்க்கிறது. இது இந்தியாவின் முதல் உயிர்க்கோள் காப்பகமாகும்.
மலைகளின் ராணி – ஊட்டி
மேற்கு தொடர்ச்சி மலையும், கிழக்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடமே நீலகிரி ஆகும்.
நீலகிரியில் யானைகளுக்கான சரணாலயம் அமைந்துள்ளது.
அருவிகள்
- கல்லட்டி நீர் வீழ்ச்சி
- காட்டேரி அருவி
- லாஸ் அருவி
- கேத்தரின் அருவி
- மாயார் அருவி
- சின்னக் குன்னூர்
அனைகள்
- பைக்காரா அணை
- சாந்தி நல்லா நீர்த்தேக்கம்
- காமராஜ் சாகர்
- மரவக்கண்டி நீர்த்தேக்கம்
சுற்றுலா தளங்கள்
- முதுமலை தேசியப் பூங்கா – 1990
- முக்கூர்த்தி தேசிய பூங்கா – 1990
- முதுமலை யானைகள் புத்துணர்வு முகாம்
- பைக்காரா அணை, படகு இல்லம்
- தாவரவியல் பூங்கா
- ரோஜா பூங்கா ஊட்டி
- ஊட்டி மலை ரயில்
- ஊட்டி படகு ஏரி
- தொட்டபெட்டா சிகரம்
- சிம்ஸ்பார்க்
- ஆரண்மூர் அரண்மனை
- தவளை மலை காட்சி முனை