1846, செப்டம்பர் 23 – ஆம் தேதி நெப்‍டியூன் கோளானது, பிரெஞ்சு வாணியலாளர் உர்பைல் லேவெரியர் மற்றும் பிரிட்டிஷ் வானியலாளர் ஜோஹன் கோட்பிரீட் காலே ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.

நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிகத் தொலைவில் உள்ள ஒரு கோளாகும்.

நெப்டியூன்(Neptune) என்பதன் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.

சூரியக்குடும்பத்தில் விட்டத்தின் அடிப்படையில் இது நான்காவது மற்றும் நிறை அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகும்.

நெப்டியூன் பூமியைப்போல 17 மடங்கு நிறை கொண்டது. மற்றும் பூமியைவிட 15 மடங்கு பெரிய (ஆனால் அடர்த்தி குறைந்த).

யுரேனஸ்-ஐ விட சற்று பெரியது.

சராசரியாக நெப்டியூன் சூரியனை 30.1 வானியல் அலகு தூரத்தில் சுற்றுகிறது. நெப்டியூன் ஒரு வாயுக்கோளாகும். இது சூரிய குடும்பத்தில் விண்கள் பட்டைக்கு வெளியே உள்ளது. இதனைச் சுற்றி வாயுவினால் ஆன ஒரு வளையம் உள்ளது.

நெப்டியூன் சூரியனை வட்டப்பாதையில் ஒரு முறை சுற்று வர சுமார் 164.8 வருடங்கள் ஆகும்.

2011, ஜூலை, 11 அன்று – கடந்த 1848 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நெப்டியூனானது, மனிதர்கள் அறிந்து சூரியனை ஒரு முறை முழுமையாக சுற்றிவந்துள்ளது.