தலைநகரம் – காத்மாண்டு

அரசாங்கம் – ஜனநாயக கூட்டாட்சி குடியரசு.

பரப்பளவு – 1,47, 181 சதுர கிலோ மீட்டர்.

நாணயம் – நேபாள ரூபாய் (NPR)

தொலைபேசி அழைப்புக்குறி +977

இணையக்குறி .np

1768, டிசம்பர், 21 – அன்று, நேபாளம், ஒரு குடையின் கீழ் ஒரு நாடானது.

1768-இல் ஷா வம்சத்தின் கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா என்பவர் கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களில் காத்மாண்டு சமவெளியின் மூன்று நகரங்களைக் கைபப்ற்றி, ஒன்றினைத்த நேபாள இராச்சியத்தை நிறுவினார்.

1864 – ஆம் ஆண்டு, ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்களான ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர், நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச மன்னர்களின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.

1951 – ல் மீண்டும் ஷா வம்ச மன்னர்கள் நேபாளத்தை 1951 முதல் 2008 முடிய ஆண்டனர்.

1816, மார்ச், 04 – அன்று, ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில் ஏற்பட்ட சுகௌலி போர் உடன்படிக்கையின் படி, நேபாள இராச்சியத்தினர் கைப்பற்றியிருந்த மொரங், சிக்கிம், டார்ஜிலிங், கார்வால் மற்றும் சிர்முர், குமாவுன் பகுதிகளை ஆங்கிலேயர்களுக்கு விட்டுக் கொடுத்தனர்.

1815-1816 – இல் நடைபெற்ற ஆங்கிலேய-நேபாளப் போரின் முடிவில், ஷா வம்சத்தின் நேபாள இராச்சியத்தினர் கைப்பற்றியிருந்த, கார்வால், சிர்மூர், குமாவுன், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகள் கிழக்கிந்திய கம்பெனியினருக்கு வழங்கப்பட்டது.

1846 – இல் நேபாளத்தில் ஆதிகாரம் செலுத்திவந்த ஜங் பகதூர் ராணா என்ற தளபதியை பதவி கவிழ்க்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதன் போது அரசருக்கு சார்பானவர்களுக்கும் பகதூருக்கு சார்பானவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் பகதூர் வெற்றி பெற்று தன்னை பரம்பரை தலைமை பிரதமராக்கிக் கொண்டு அரசரின் அதிகாரங்களை தன்கையில் எடுத்துக் கொண்டார். மேலும் இவர் ராணா வம்சத்திற்கு வித்திட்டார்.

ராணா வம்சத்தார் பிரித்தானிய ஆதரவு கொள்கையை கடைப்பிடித்தனர்.

1923 – இல் ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது, இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் நேபாளத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டது.

1940 – களின் இறுதியில் ஜனநாயக இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் ராணா வம்ச அதிகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

1950 -இல், இதேவேலை சீனா திபேத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது, இதன் காரணமாக நேபாளத்தின் அரசியலில் இந்தியா ஆர்வம் கொண்டது.

இதன் போது இந்தியாவில் தங்கியிருந்த ஷா வம்ச மன்னர் திரிபுவன் வீர விக்ரம் ஷா என்பவரை நேபாளாத்தின் அரசரானார். பல வருடங்களாக அரசுக்கும் அரசருக்கும் ஏற்பட்ட அதிகார பிரச்சினைகளின் பிறகு, 1959 இல் அமைச்சரவையை பதவி விலக்கினார்.

கட்சியற்ற பஞ்சாயத்து ஆட்சி முறையொன்று ஏற்படுத்தப்பட்டது.

1991 – ஆம் ஆண்டு, 1989 இல் ஏற்பட்ட மக்கள் போராட்டங்கள் காரணமாக அரசர், நேபாள அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி பல கட்சி முறைய ஏற்படுத்தினார்.

முதலாவது சனநாயக தேர்தலில் நேபாள காங்கிரசு வெற்றி பெற்று கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமராக பதவியேற்றார்.

நேபாளம், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும்.

தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன.

நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.

நேபாள நாட்டு மக்கள் எவரேஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று அழைக்கின்றனர். சாகர் மாதா என்றால் பூமியின் தலை வானத்தைத் தொடுகிறது என்று அர்த்தம்.

சார்க் அமைப்பின் தலைமையகம் காத்மாண்டில் அமைந்துள்ளது.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா