நைஜீரியா அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆப்ரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும்.

தலைநகரம் – அபுஜா

ஆட்சி மொழி – ஆங்கிலம்

அரசாங்கம் – கூட்டாட்சி குடியரசு

1960, அக்டோபர், 01 – நைஜீரியாவாடது ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

1963, அக்டோபர், 01 – நைஜீரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும்.

இதன் மேற்கில் பெனின் குடியரசும் சாட், கேமரூன் ஆகியன கிழக்கிலும் நைஜர் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.

இதன் கடற்கரைப் பகுதி தெற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவில் அமைந்துள்ளது.

இது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி தலைநகர் பிரதேசமான தலைநகர் அபுஜா அமைந்துள்ளது.

நைஜீரியா உத்தியோகபூர்வமாக ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடு.

இந்த நாட்டில் ஐநூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர்.

நவீனகால நைஜீரியா நூற்றாண்டுகளாக பல இராச்சியங்கள் மற்றும் பழங்குடி மாநிலங்களின் தளமாக இருந்து உள்ளது.

நவீன அரசு 19 ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து உருவானது.

1914 இல் தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா ஆகியவை இணைக்கப்பட்டன.

பிரித்தானிய ஆட்சியின் கீழ், மறைமுக ஆட்சியை நடைமுறைப்படுத்திய அதே சமயத்தில் பிரித்தானிய நிர்வாக மற்றும் சட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன.

1960 – ஆம் ஆண்டு, நைஜீரியா சுதந்திரமான கூட்டமைப்பு ஆனது, 1967 முதல் 1970 வரை நாடு உள்நாட்டுப் போரில் மூழ்கியது.

1970, ஜனவரி, 12 -நைஜீரியாவின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.

ஆட்சியானது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு இடையில் மாறியது, இந்நலை 1999 இல் நிலையான ஜனநாயகத்தை நாடு அடையும் வரை நிலவியது.

1999, மே, 29 – தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலே முதன் முதலில் நியாயமாக நடந்த தேர்தலாக கருதப்பட்டது.

நைஜீரியா அதன் பெரிய மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் காரணமாக, பெரும்பாலும் “ஆபிரிக்காவின் இராட்சசன்” என அழைக்கப்படுகிறது.

சுமார் 184 மில்லியன் மக்களுடன், நைஜீரியா ஆப்பிரிக்காவில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகின் ஏழாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது.

உலகின் மிக அதிகளவில் இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாகும்.

இந்த நாட்டில் 500 க்கும் அதிகமான இனக்குழுக்கள் வசித்து வருவதால், இது பல நாடுகளைக் கொண்ட நாடு என கருதப்படுகிறது.

நாட்டின் மூன்று பெரிய இனக்குழுக்களாக ஹுசா, இக்போ, யுவோர் ஆகியவை உள்ளன.

இந்த இனக்குழுக்கள் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளை பேசி, பல்வேறு கலாச்சாரங்களுடன் அடையாளம் காணப்படுகின்றன.

நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்.

நாட்டின் தெற்கு பகுதியில் பெரும்பாலும் கிருத்தவர்கள் வாழ்கின்றனர், வடக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் உள்ளனர்.

நைஜீரியாவின் சிறுபான்மை பழங்குடி மக்களான இக்போ மற்றும் யொரூப மக்கள் பழங்குடி மதங்களைப் பின்பற்றுகிறார்கள்.

2002, மே, 04 – நைஜீரியாலவில் உள்ள கெனொ (Keno) நகரத்தில், ESA Airline விபத்துக்குள்ளானதில் சுமார் 149 பேர் இறந்தனர்.


ஆசியா


ஐரோப்பா


ஆப்ரிக்கா


வட அமெரிக்கா


தென் அமெரிக்கா


ஆஸ்திரேலியா


அண்டார்டிகா