1772 ஆம் ஆண்டு, டேனியல் ரூதர்போர்டு வளிமண்டதலத்தில் நைட்ரஜன் வாயு உள்ளதென்பதை கண்டுபிடித்தார்.

நைட்ரஜன் ஒரு தனிமம் ஆகும்.

இதன் அணு எண் 7.

இது ஒரு நிறமற்ற, மணமற்ற, சுவைற்ற ஒரு வாயு ஆகும்.

வளிமண்டலத்தில் 78.1% அளவிற்கு நைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது.

பிரபஞ்சத்தில் நைட்ரஜன் ஒரு பொதுவான தனிமமாகும்.

சூரிய மண்டலம் மற்றும் பால் வெளியில் உள்ள மொத்த பொருட்களில் நைட்ரஜன் ஏழாவது இடத்தைப் பிடிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

திட்டவெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இரண்டு நைட்ரசன் அணுக்கள் சேர்ந்து டை – நைட்ரஜன் தோன்றுகிறது.

இது நிறமும் நெடியும் அற்றதாக ஈரணு வளிமமாக N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டுடன் அறியப்படுகிறது.

வளிமண்டலத்தில் இதன் பருமன் ஆக்சிசனை விட 4 மடங்கு அதிகமாய் உள்ளது .

தனிம அட்டவணையில் நைட்ரஜன் தொகுதியில் (V. A) உள்ள எல்லாத் தனிமங்களும் உலோகம் அல்லது உலோகம் போன்றதாக இருக்க நைட்ரஜன் மட்டும் வளிம நிலையில் இருக்கின்றது.

மனித உடலில் இடம்பெற்றுள்ள ஆக்சிஜசன், கார்பன், ஹைட்ரஜன் ஆகியனவற்றுக்கு அடுத்து அதிகமாக 3% அளவுக்கு நைட்ரசன் இடம்பிடித்துள்ளது.

காற்றிலுள்ள நைட்ரஜன் வாயு உயிர்க் கோளத்திற்குள் வந்து கரிமச் சேர்மங்கள் வழியாக மீண்டும் காற்றில் கலப்பதை நைட்ரஜன் சுழற்சி விவரிக்கிறது.

தொழில்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சேர்மங்களான அமோனியா, நைட்ரிக் அமிலம், சயனைடுகள், அமினோ அமிலங்கள், நியூக்ளிக் அமிலங்கள், அடினோசின் முப்பாசுப்பேட்டு போன்றவை நைட்ரஜன் கொண்டுள்ளன.

தனிமநிலை நைட்ரஜன் வலிமையான முப்பிணைப்புகளும், ஈரணுமூலக்கூறுகளில் அனைத்திலும் இரண்டாவது வலிமையான பிணைப்பாகவும் கருதப்படுகிறது.

N2 வை உபயோகமுள்ள சேர்மங்களாக மாற்ற முடியாமல் உயிரினம், தொழிற்சாலை இரு பிரிவுகளும் இதனால் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன.

ஆனால், அதேசமயத்தில் எரிதல், வெடித்தல், நைட்ரஜன் சேர்மங்களை சிதைத்தல் போன்ற வேதியியல் செயல்முறைகளால் பயனுள்ளவகையில் அளப்பறிய ஆற்றலை பெற முடிகிறது.

செயற்கை முறையில் தயாரிக்கப்படும் அமோனியாவும் நைட்ரேட்டுகளும் முக்கியமான உரவகைகளாகும்.

தண்ணிர் ஊற்றுகளை தூர்ந்து போகவைக்கும் மாசுபொருட்களில் ஒன்றாக நைட்ரேட்டுகள் கருதப்படுகின்றன.

உரங்கள் மற்றும் ஆற்றல் மூலங்களாக பயன்படுவதைத் தாண்டி கரிமச்சேர்மங்களின் பகுதிப்பொருளாக நைட்ரஜன் விளங்குகிறது. உயர் வலிமை துணி மற்றும் உயர் பசையில் பயன்படும் சயனோஅக்ரிலேட் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் கெவ்லார் இழையாகவும் நைட்ரஜன் பயன்படுகிறது.

மருந்தியல் துறையில் நுண்ணுயிர் கொல்லிகள் உட்பட ஒவ்வொரு முக்கிய மருந்திலும் நைட்ரசன் ஒரு முக்கியப் பகுதிப்பொருளாக உள்ளது, மருந்துகள் போல தோற்றமளிக்கும் அல்லது இயற்கை நைட்ரஜன் மூலக்கூறுகள் சுட்டி மூலக்கூறுகளாக உள்ளன:

உதாரணமாக, கரிம நைட்ரேட்டுகள், நைட்ரோகிளிசரின், நைட்ரோபுருசைடு போன்றவை நைட்ரிக் ஆக்சைடாக வளர்சிதைமாற்றத்தின் போது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

காஃபின் மற்றும் மார்பின் அல்லது செயற்கை அம்படமைன்கள் போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நைட்ரஜன் மருந்துகள், கால்நடை நரம்புக்கடத்திகளின் ஏற்பிகளாக செயல்படுகின்றன.

தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு நைட்ரஜன் ஆகும்.

நீரில் கரையாத வாயு நைட்ரஜன் வாயு ஆகும்.