நொதியால் பழுப்பாகுதல்ஆப்பிலில் டைரோசினிஸ் என்றழைக்கப்படும் பாலி பினால் ஆக்ஸிடேஸ் உள்ளது. ஆப்பிளை நறுக்கி வைக்கும் போது அதன் செல்கள் வளி மண்டல ஆக்ஸிஜனின் தாக்கத்திற்கு உட்படுவதால் ஆப்பிளில் உள்ள பீனாலிக் சேர்மம் ஆக்ஸிஜனேற்றமடைகிறது.

இது நொதியால் பழுப்பாதல் என்று அழைக்கப்படுகிறது.

இதனால் நறுக்கிய ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறுகிறது.

இத்தகைய நொதியால் பழுப்பாதல் என்பது வாழைப்பழம், அவகோடா, பேரிக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றிலும் நிகழ்கிறது.