பகுபதம்:

  • இதனை பகுதி, விகுதி எனப் பிரிக்க முடியும்
  • இருவகைப்படும். அவை,

i) பெயர் பகுபதம் ii) வினை பகுபதம்

1.பெயர் பகுபதம்:

  • இது பொருள், இடம், காலம், சினம், குணம், தொழில் போன்றவற்றின் அடிப்படையில் தோன்றும்.

உதாரணம்:

i) பொன்னன்    – பொன் + ன் + அன் < பொன் பொன் எனும் பொருட்பெயர் >

ii) ஊரன்  – ஊர் + அன் < ஊர் எனும் இடப்பெயர் >

iii) ஆதிரையான் – ஆதிரை + ய் + ஆன் < ஆதிரை எனும் காலப்பெயர் >

iv) கண்ணன்     – கண் + ண் + அன் < கண் எனும் சினைப்பெயர் >

v) கரியன்       – கருமை + அன் < கருமை எனும் பண்புப்பெயர் >

vi) நடிகன் – நடி + க்+ அன் < நடித்தல் எனும் தொழிற்பெயர் >

2.வினை பகுபதம்:

  • இது பகுதி, விகுதி, இடைநிலை முதலியனவாகப் பிரிக்கப்படும் வினைமுற்று ஆகும்.

உதாரணம்: செய் + த் + ஆன் = செய்தான்