- அசைத்த – அசை+த்+த்+அ
அசை – பகுதி; த் – சந்தி; த் இறந்தகால இடைநிலை; அ – பெயரெச்ச விகுதி.
2. திறந்து – திற+த்(ந்)+த்+உ
திற – பகுதி; த் – சந்தி, ’ந்’ ஆனது விகாரம்; த் – இறந்தகால இடைநிலை; உ – வினையெச்ச விகுதி.
3. உதவிய – உதவு+இ(ன்)+ய்+அ
உதவு – பகுதி; இன் – இறந்தகால இடைநிலை, ‘ன்’ கெட்டது விகாரம்; ய் – உடம்படுமெய் சந்தி; அ – பெயரெச்ச விகுதி.
4. வாழிய – வாழ்+இய
வாழ் – பகுதி; இய – வியங்கோள் வினைமுற்று விகுதி.
5. வாழ்த்துவம் – வாழ்த்து+வ்+அம்
வாழ்த்து – பகுதி; வ் – எதிர்கால இடைநிலை; அம் – தன்மைப் பன்மை வினைமுற்று விகுதி.
6. இரங்குவிர் – இரங்கு+வ்+இர்
இரங்கு – பகுதி; வ் – எதிர்கால இடைநிலை; இர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி.
7. ஆற்றீர் ஆற்று+ஆ+ஈர்
ஆற்று – பகுதி; ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது; ஈர் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி.
8. ஓம்புமின் ஓம்பு+மின்
ஓம்பு – பகுதி; மின் – ஏவல் பன்மை வினைமுற்று விகுதி.
9. வேண்டேன் – வேண்டு+ஆ+ஏன்
வேண்டு – பகுதி; ஆ – எதிர்மறை இடைநிலை புணர்ந்து கெட்டது; ஏன் – தன்மை ஒருமை வினைமுற்று விகுதி.
10. அறைந்தாய் – அறை+த்(ந்)+த்+ஆய்
அறை – பகுதி; த் – சந்தி; ந் ஆனது விகாரம்; த் – இறந்தகால இடைநிலை; ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று.
11. என்கோ – என்+க்+ஓ
என் – பகுதி; க் – சந்தி; ஓ – வினாப்பொருள் தரும் விகுதி.
12. மருவ – மருவு+அ
மருவு – பகுதி; அ – வினையெச்ச விகுதி.
13. இரட்ட – இரட்டு+அ
இரட்டு – பகுதி; அ – வினையெச்ச விகுதி.
14. விடுவார் – விடு+வ்+ஆர்
விடு – பகுதி; வ் – எதிர்கால இடைநிலை; ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி.
15.தேடுகிறாய் – தேடு+கிறு+ஆய்
தேடு – பகுதி; கிறு – நிகழ்கால இடைநிலை; ஆய் – முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி.
16.முழக்கி – முழக்கு+இ
முழக்கு – பகுதி; இ – வினையெச்ச விகுதி.
17.சுழன்று – சுழல்(ன்)+ற்+உ
சுழல் – பகுதி; ‘ல்’,’ன்’ ஆனது விகாரம்; ற் – இறந்தகால இடைநிலை; உ- வினையெச்ச விகுதி.
18.சுருங்கிய – சுருங்கு+இ(ன்)+ய்+அ
சுருங்கு –பகுதி; இ(ன்) – இறந்தகால இடைநிலை; ‘ன்’ கெட்டது விகாரம்; ய் – உடம்படுமெய் சந்தி; அ – பெயரெச்ச விகுதி.
அரேபியா ஆசியா ஆன்மீகம் இலக்கணம் உடல்நலம் உணவு உலோகம் ஐசக் நியூட்டன் ஒலிம்பிக் கடன் மோசடி கால்பந்து கிரிக்கெட் சட்டம் சாலைவிதி சிந்தனைகள் சிறுகதை சென்னை செயற்கைக்கோள் ஜெருசலேம் டாலர் டென்னிஸ் தகவல் தொழில்நுட்பம் தமிழர்கள் தமிழ் திருத்தலம் தென் அமெரிக்கா தேர்தல் நகைச்சுவை நாடுகள் நிலா பழமொழி புத்தகம் புத்தர் புற்றுநோய் பெண்கள் பொது அறிவு போர் மருத்துவம் மாநிலம் முக்கிய தினங்கள் வங்கித்தாள் வழக்கு வாக்கெடுப்பு வானியல் விபத்து