பகுபத உறுப்புகள்பகுபத உறுப்புகள்:

 • பகுபத உறுப்புகள் ஆறு ஆகும். அவை, பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம்.

i) பகுதி: பகுதியானது ‘ஏவல்’ வினையாக வரும்.

உதாரணம்: படித்தான் – படி என்பது பகுதி

ii) விகுதி:

 • விகுதியானது இறுதியில் வரும்.
 • இது திணை, எண், பால், இடம் ஆகியவற்றைக் குறிக்கும்.

உதாரணம்:

உயர்திணை:  

 • நடந்தான் – ஆன் – ஆண்பால் விகுதி
 • நடந்தாள் – ஆள் – பெண்பால் விகுதி
 • நடந்தனர் – அர் – பலர்பால் விகுதி

அஃறிணை:

 • நடந்தது – அது – ஒன்றன்பால் விகுதி
 • நடந்தன – அ – பலவின்பால் விகுதி

iii) இடைநிலை:

 • பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும். இது காலத்தை உணர்த்துவதால் ‘காலங்காட்டும் இடைநிலை’ எனப்படும்.
 • இது நான்கு வகைப்படும். அவை,

அ. நிகழ்கால இடைநிலை: கிறு, கின்று, ஆநின்று

 • உண்கிறான் – உண் + கிறு + ஆன்
 • உண்கின்றான் – உண் + கின்று + ஆன்
 • உண்ணாநின்றான் – உண் + ஆநின்று + ஆன்

ஆ. இறந்தகால இடைநிலை: த், ட். ற். இன்

இ. எதிர்கால இடைநிலை: ப், வ்

ஈ. எதிர்மறை இடைநிலை: இல், அல், ஆ

 • உண்டிலன் – உண் + ட் + இல் + அன்
 • காணலன் – காண் + அல் + அன்
 • பாரான் – பார் + ஆ + அன்

iv) சந்தி: இது பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வரும்.

v) சாரியை: இது பெயர்ச்சொல்லையும், வினைச்சொல்லையும் சார்ந்து வரும். அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம் ஆகியவை சாரியை ஆகும்.

உதாரணம்: உண்டனன் – உண் + ட் + அன் + அன்

vi) விகாரம்: பகுதி, இடைநிலை, விகுதி போன்றவை சேரும்போது ஏற்படும் மாறுபாடு விகாரம் எனப்படும்.

உதாரணம்: ‘வந்தான்’ எனும் சொல்லில் ‘வா’ எனும் பகுதி ‘வ’ என வந்துள்ளது, இதுவே விகாரம் ஆகும்.