1668 ஆம் ஆண்டு மேற்குக் கடற்கரையில், அரசர் இரண்டாம் சார்லசிடமிருந்து ஆண்டுக்கு பத்து பவுன் வாடகைக்கு வணிகக்குழு பம்பாய் தீவைப் பெற்றது.

1825, செப்டம்பர், 04 – அன்று, தாதாபாய் நௌரோஜி அவர்கள், மும்பையிலுள்ள நவ்சாரியில் பிறந்தார்.

1870 – ஆம் ஆண்டு, தாதாபாய் நௌரோஜி, பம்பாய் மாநகராட்சிக் கழகத்திற்கும், நகரசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1885, டிசம்பர், 1 அன்று, உமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, ஆலன் ஆக்டவியன் ஹியூம், சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் நடந்த கூட்டத்தில் உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1885 ஆம் ஆண்டு, பம்பாய் மாகாண சங்கம் தொடங்கப்பட்டது.

1917, ஜூன், 30 – அன்று, இந்திய சுதந்திர போராட்ட வீரரான தாதாபாய் நவ்ரோஜி அவர்கள் மும்பையில் இறந்தார்.

1936 – ஆம் ஆண்டு, சமதர்ம சமுதாய முழக்கங்களுக்கு எதிரான பாம்பே அறிக்கை வெளியிடப்பட்டது.

2011, ஜூலை, 13 – அன்று மும்பை நகரில் மாலை நேரத்தில் மூன்று இடங்களில் தீவிரவாதிகளால் வெடிகுண்டு வெடித்ததில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

ஏழு தீவுகளின் நகரம் என்று அழைக்கப்படுகிறது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் உஷா மேத்தா இரகசிய வானொலி நிலையத்தை நடத்தினார்.

இந்திய அணு மின்சக்தி நிறுவனம் (NPCIL) இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது மகாராஷ்டிராவின் மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு அரசு நிறுவனம் ஆகும்.

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகம் – மும்பை துறைமுகம்

இந்திய அரசு


மாநிலங்கள்


யூனியன் பிரதேசங்கள்


முக்கிய நகரங்கள்


இந்திய ஆறுகள்