சேக்கிழாரின் பெரியபுராணம் பல்லவர்கள் ஆட்சி பற்றி சிறப்பாக எடுத்துரைக்கும் நூல் ஆகும்.

மத்தவிலாசப்பிரகசனம் பல்லவர்கள் காலத்தின் சமூக, சமய நிலையை அறிய முக்கிய சான்றாக உள்ளது.

மண்டலத்தின் ஆட்சியாளர்களாக இளவரசர்கள் நியமிக்கப்பட்டனர்.

நெசவுத்தொழிலாளிகளுக்கு தறி இறை என்ற வரி விதிக்கப்பட்டது.

பல்லவர்கள் காலத்தில் நகர நீதிமன்றங்கள் அதிகரணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

திருப்புறம்பியம் போரில் கொல்லப்பட்ட பல்லவ மரபின் கடைசி அரசன் அபராஜதன் ஆவார்.

பல்லவர்கள் காலத்தில் தர்மசேனாவின் தலைவர் அரசர் ஆவார்.

கிராம நீதிமன்றங்கள் காரணங்கள் என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

குயவருக்கு குசக்காணம் என்ற வரி விதிக்கப்பட்டது.

கிராம சபையின் தனிக்குழுக்கல் வாரியம் என்று அழைக்கப்பட்டது.

பல்லவ அரசில் மூன்று வகையான நீதிமன்றங்கள் இருந்தன.

பல்லவ கால ஆட்சியில் நெல்லூர் மாவட்டம் வடக்கு எல்லையாக இருந்தது.

பல்லவ மன்னர்கள் தங்களுக்கு மகாராஜா, மகாராதாதிராஜா, தர்மமகா ராஜாதிராஜா போன்ற பட்டங்களை சூட்டிக்கொண்டனர்.

பல்லவர்கள் காலத்தில் கிராமத்தில் ஏற்படும் உரிமையியல் வழக்குகளை கிராம சபைகள் தீர்த்துவைத்தன.

பல்லவர்கள் ஆட்சியில் ஒரு அரசனுக்குபின் அந்த அரசனது மூத்த மகன் ஆட்சிக்கு வருவது என்பது மரபாக இருந்தது.

பரமேஸ்வரனின் கூரம் பட்டயங்கள். மூன்றாம் நந்திவர்மனின் வேலூர்பாளையம் செப்பேடுகள் போன்றவைகள் பல்லவர்கள் கால செப்புப்பட்டயங்கள் ஆகும்.

பல்லவர்கள் தமிழகத்தை கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர்.

பல்லவர்கள் முடியாட்சி ஆட்சிமுறையை பின்பற்றினர்.

பல்லவர்கள் பெரும்பாலும் மெளரியர்கள் ஆட்சிமுறையை பின்பற்றினர்.

சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண் கல்வெட்டு, இரண்டாம் புலிகேசியின் அய்‍ஹொ கல்வெட்டு, கீர்த்திவர்மனின் கேந்தூர் கல்வெட்டு போன்ற கல்வெட்டுகள் பல்லவர்களின் சமகால கல்வெட்டுகளாகும்.