கி.பி.முதலாம் நூற்றாண்டு – டாலமி காலகட்டத்தில் நாஞ்சில் நாடானது சேரா்களுக்கும் பாண்டியா்களுக்கும் இடையே ஒரு தாங்கலாக இருந்தது.

கி.பி.276 இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ் என்பவரின் குறிப்பேட்டில் கன்னியாகுமரி பற்றிய பதிவு உள்ளது. இக்குறிப்பேட்டில் “கொமரி” என்பது துறைமுகமாகவும் அதுவரையிலும் உள்ள நிலப்பகுதி பாண்டிய நாட்டின் பகுதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னன் கடுங்கோன் தென் தமிழ்நாட்டை களப்பிரர்களிடமிருந்து மீட்டதன் மூலம் களப்பிரர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

கி.பி. 10ஆம் நூற்றாண்டின்போது, பாண்டியர்களின் பரம வைரிகளான, சோழ மன்னா்கள் மதுரையைக் கைப்பற்றினா்.

கி.பி. 1223 – இல் பாண்டியா்கள் மீண்டும் மதுரை ஆட்சியைக் கைப்பற்றி சோழர்களை விரட்டினா்.

கி.பி. 1323 ஆம் ஆண்டில், மதுரை உட்பட பாண்டிய சாம்ராஜ்யம் தில்லி பேரரசின் ஒரு மாகாணமாக, துக்ளக் ஆட்சியின் கீழ் மாறியது.

பாண்டிய மன்னா்கள் “தமிழ்” மொழியின் வளா்ச்சிக்கும் பெரிதும் வழிவகுத்தனா்.

அவா்தம் ஆட்சிக்காலத்தில், மிகச் சிறந்த காவியங்கள் தமிழில் உருவாயின.

தன் கணவனாகிய கோவலன் “கள்வன்” என்று குற்றம் சாட்டப்பட்டு, பாண்டிய மன்னனால் கொலையுண்ட செய்தி அறிந்த கண்ணகி, அரசனின் அநீதிக்கு எதிராக தன் கற்புத்திறத்தால், மதுரையை எரியச் செய்த வரலாறு கூறும் “சிலப்பதிகாரம்” எனும் காவியம் தோன்றியது.

பாண்டியர்களின் ஓவியக்கலையை பறைசாற்றுவது சித்தன்னவாசல் ஆகும்.

பாண்டிய மன்னர்கள் சிறப்பு பற்றி மதுரைக்காஞ்சி என்ற இலக்கியம் குறிப்பிடுகிறது.