• பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு 10 கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது.
  • இந்தியாவிலுள்ள இராஜநாகம் தான் உலகிலுள்ள பாம்புகளிலேயே நீளமான நஞ்சுள்ள பாம்பு ஆகும்.
  • இராஜநாகமானது 15 அடி நீளம் வரை வளரக்கூடியது, மேலும் கூடுகட்டி வாழக்கூடிய ஒரே பாம்பு இனம் ஆகும். மேலும் இது மற்ற பாம்புகளையே கூட உணவாக்கிக்கொள்ளும் இயல்புடையது.
  • பாம்புகளின் பற்கள் உள்நோக்கி வளர்ந்திருக்கும் இதற்குக் காரணம் இரையைக் பிடித்தால் தப்ப விடக்கூடாது என்பதற்காக.
  • பாம்புகள் இரையை மென்று தின்பதில்லை மாறாக அதை அப்படியே விழுங்கி விடுகிறது.
  • தமிழ்நாட்டில் பாம்புப் பண்னை செனனையைிலுள்ள கிண்டியில் அமைந்துள்ளது.
  • பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்தது.
  • உலகில் 2750 வகையான பாம்புகள் உள்ளன.
  • இந்தியாவில் 244 வகையான பாம்புகள் உள்ளன.
  • மொத்தமுள்ள பாம்பு வகைகளில் 52 வகை பாம்புகள் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தது.
  • பாம்பிற்கு தண்ணீர் அருந்தத் தெரியாது. பாம்பு விழுங்குகின்ற எலி, தவளைகளின் உடம்பில் உள்ள நீர்ச்சததே அதற்குப் போதுமானதாகும், தனியாக பாம்புகள் தண்ணீர் அருந்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பாம்பு பால் குடிக்கும் என்பது பொய் ஆகும்.
  • பாம்புகள் இறையைக் கொல்லவும் செரிமானத்திற்காகவும் அதன் எச்சிலில் நஞ்சு வைத்திருக்கிறது.
  • பாம்புகள் தரையின் அதிர்வுகளை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக இருக்கின்றது.
  • விவசாயிகளுக்கு பாம்பு நண்பனாக கருதப்படுகிறது, ஏனென்றால் பாம்பே வயல்களில் உள்ள எலி போன்ற பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற உயிரனங்களைக் கொன்று அதற்கு இரையாக்குகிறது.
  • ஒரு பாம்பைக் கொன்றால் அதன் இணைப் பாம்பு பழி வாங்கும் என்று சொல்வதுண்டு, இது உண்மையன்று. கொல்லப்பட்ட பாம்பின் உடம்பிலிருந்து ஒரு வகை வாசனை திரவியம் வெளியேறும், அந்த திரவியத்திலிருந்து வெளியேறும் வாசனை மற்ற பாம்புகளை அந்த இடத்தை நோக்கி வரவைக்கிறது. பழிவாஙக பாம்புகள் வருவதில்லை.
  • பாம்புகள் அடிக்கடி நாக்கை வெளியே நீட்டுவது சுற்றுப்புரத்திலுள்ள வாசனையை அறிந்துகொள்ள‍வே அவ்வாறு செய்கிறது.
  • நல்லபாம்பின் நஞ்சு கோப்ராக்சின் (Cobrozin) எனும் வலிநீக்கி மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது.
  • இந்திய அரசு வனவிலங்குச் சட்டம் 1972-ன் படி பாம்புகளை தோலுக்காக வேட்டையாடுவது குற்றமாகும்.