பாரதிதாசன் அவர்கள் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் பிறந்தார்.

இவர் புதுச்சேரியில் பிறந்தார்.

பாரதிதாசன் அவர்கள் “புரட்சிக்கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் புகழப்படுகிறார்.

பாரதிதாசனின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும்.

இவர் பாரதியாரின் மீது கொண்ட ஆவலால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார்.

பாண்டியன் பரிவு, அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர்.

பாவேந்தர், புரட்சிக்கவி என்ற பெயர்களும் உண்டு.

பாரதிதாசன் அவர்கள் 1964 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் இயற்கை ‍எய்தினார்.