பிம்பிசாரர் ஹர்யங்க வம்சத்தைச் சார்ந்தவர் ஆவார். பிம்பிசாரர் மகத நாட்டை கி.மு.543 முதல் தன் இறுதிவரை ஆண்டார். இவருடைய மகன் அஜாதசத்ரு ஆவார்.

இவர் கௌதம புத்தரின் சீடர்களில் ஒருவர் ஆவார்.

வரலாற்றின்படி பிம்பிசாரன் தனது மகன் அஜாத சத்ருவினால் சிறைப்பிடிக்கப்பட்டு பசியினால் வாடி உயிர்நீத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிகழ்வு கிமு 491 வாக்கில் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறது